முஹம்மமு முர்ஸி 379 சிறை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கினார்
எகிப்தில் நடைபெற்று வந்த ராணுவ ஆட்சியை திரும்பப்பெற்று, அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம், கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 வாரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் பலியாகினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 379 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கெய்ரோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, 'எகிப்து அதிபர், முஹம்மது மோர்சி, குற்றம்சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதால், வழக்குகளில் இருந்து 379 பேரையும் விடுவிக்கின்றேன்' என நீதிபதி கமால் எட்டின் ருஷ்டி தீர்ப்பளித்தார்.
Try to Change not only Egypt but the whole Gulf also
ReplyDelete