அமெரிக்காவில் கடந்தாண்டு மாத்திரம் 349 இராணுவத்தினர் தற்கொலை
அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 349 வீரர்கள் தற்கொலை செய்து உள்ளனர். கடந்த ஆண்டில்தான் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து இருப்பது அதிகபட்சமாக உள்ளது. 2009-ம் ஆண்டில் 298 பேரும், 2010-ம் ஆண்டில் 301 பேரும், 2011-ம் ஆண்டில் 239 பேரும் தற்கொலை செய்து உள்ளனர்.
தற்கொலை செய்தவர்களில் பெரும்பாலானோர் போர் முனைகளில் இருந்தவர்கள். அங்கு இருந்த நெருக்கடி, மனஇருக்கம் ஆகியவை தான் தற்கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு தற்கொலை மிகவும் அதிகரித்து இருப்பதை அடுத்து ராணுவ வீரர்களுக்கு மனரீதியான கவுன்சிலிங் கொடுக்க அமெரிக்க ராணுவ துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் துறை உதவியையும் நாடியுள்ளது.
மன ரீதியான கவுன்சிலிங் அமெரிக்க ஆட்ச்சியாளர்களுக்கு கொடுத்தால் இவ்வாறான தற்கொலை நடக்காது. பேரழிவு ஆயுதம் இருப்பதாக தேடிச்சென்று பொதுமக்களை இராக்கில் கொன்றார்கள், அல்கய்தா தீவிர வாதிகளை பிடிப்பதாக சொல்லி ஆப்கானிலும் அதையே செய்தார்கள் இவ்வறு நீண்ட பட்டியலை அடுக்கலாம். அமெரிக்க ஆட்ச்சியாளர்கள் திருந்தும் வரை தற்கொலைகள் நீடிக்கும்.
ReplyDelete"கெடுவார் கேடு நினைப்பார் தானவரும் கேடு" என்று என் பாட்டனார் சொன்னது நினைவுக்கு வருகிறது இந்த செய்தியை பார்க்கும் போது..!
குற்ற முல்ல மனம் குமுறும் தானே..,
ReplyDelete