Header Ads



கந்தளாய் நஜாஹ் அரபி கல்லூரி 30 ஆண்டு பூர்த்தி - நினைவு மலருக்கு ஆக்கம் கோரல்


(மூதூர் முறாசில்)

கந்தளாய் நஜாஹ் அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தியையிட்டு நினைவு மலரொன்றை வெளியிட கல்லூரி நிர்வாகம்  தீர்மானித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரவுள்ள இந்நினைவு மலரில் பரசுரிப்பதற்காக கல்லூரி தொடர்பான தகவல்கள் அல்லது கல்வி சம்பந்தமான  விபரங்கள், கட்டுரைகள் முதலானவை வரவேற்கப்படுகின்றன.

நினைவு மலருக்கு ஆக்கங்களை அனுப்பியுதவ விரும்புவோர் எதிர் வரும் 2013.01.31 ஆம் திகதிக்கு முன்பு கிடைக்கத்தக்கவாறு நஜாஹ் அரபுக் கல்லூரி, பேராறு-01,கந்தளாய்     என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இது சம்ந்தமான மேலதிக விபரங்களை 077 29 850 39 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென  கல்லூரி அதிபர் மௌலவி ஏ.ஆர்.எம்.நஸீர் நத்வி    தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.