Header Ads



மன்னர் அப்துல்லாஹ்வுக்கு ஆலோசனை வழங்க 30 பெண்கள் - ஷியாக்களும் உள்ளடக்கம்



(Tn) சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுக்கு ஆலோசனை வழங்கும் சூரா கவுன்ஸிலுக்கு முதல்முறையாக 30 பெண்களை மன்னர் நியமித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட மன்னரின் ஆணையில், ஆண்கள் மாத்திரமே இருந்த 150 பேர் கொண்ட சூரா கவுன்ஸிலில் பெண்களுக்கு 20 வீத இடமளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதத் தலைவர்களிடம் ஆலோசித்த மன்னர், இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

சூரா கவுன்ஸில் நாட்டின் கொள்கை மற்றும் சட்டங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் குழுவாகும். சூரா கவுன்ஸிலில் பெண்கள் நியமிக்கப்பட்டாலும் கடும்போக்கு சட்டத்தை கடைப்பிடிக்கும் சவூதியில் பொதுவாழ்வில் பெண்கள் சிறு பங்கையே வகிக்கிறார்கள். 

அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதில் இருந்தும் தடுக்கப்பட்டுள்ளதோடு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவும் தடையுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமையே கிடைக்கவுள்ளது. அத்துடன் பெண்களுக்கு ஆண் பாதுகாவலர் இன்றி வெளியே செல்லவும் தடையுள்ளது.

மன்னர் அப்துல்லா சூரா கவுன்ஸிலுக்கு பெண்களை நியமிப்பது குறித்து கடந்த 2011ம் ஆண்டில் அறிவித்திருந்தார். அத்துடன் பெண்கள் எதிர்வரும் 2015 மாநகர சபை தேர்தலில் நிற்கவும் வாக்களிக்கவும் உரிமை வழங்கப்படும் என மன்னர் அப்போது அறிவித்திருந்தார்.

பெண்கள் ஷரிஆ சட்டத்தின்படி சூரா கவுன்ஸிலில் பங்கேற்க மதத் தலைவர்கள் ஆலோசனை வழங்கியதற்கு அமையவே அவர்கள் சூரா கவுன்ஸிலுக்கு நியமிக்கப்பட்டதாக மன்னர் அறிவித்தார். “பெண்கள் அவர்களுடைய பணி மற்றும் பொறுப்புகளை செயற்படுத்துவதற்கான முழு உரிமையும் வழங்கப்படும்” என மன்னர் அறிவித்துள்ளார்.

இதன்படி சூரா கவுன்ஸில் கட்டடத்தில் பெண்களுக்கென தனி இடம் அமைக்கப்படவுள்ளதோடு அவர்களுக்கான தனியான நுழைவாயில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சூரா கவுன்ஸிலில் அந்நாட்டின் இரு இளவரசிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலஞ்சென்ற பைஸல் மன்னரின் மகள் மற்றும் காலஞ்சென்ற காலித் மன்னரின் மகள் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஷியா பிரிவினர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பெண்மணிகளின் பட்டியல்:

1. Dr. Ilham Mahjoub Ahmad Hassanain
2. Dr. Amal Salamah Sulaiman Al-Shaman
3. Dr. Thuraya Ahmad Obeid
4. Dr. Thuraya Ibrahim Hussein Al-Arrayed
5. Dr. Al-Jawharah Ibrahim Muhammad Bubshait
6. Dr. Hamdah Khalaf Muqbil Al-Enizi
7. Dr. Hanan Abdulraheem Mutlaq Al-Ahmadi
8. Dr. Hayat Sulaiman Hassan Sindi
9. Dr. Khowlah Sami Saleem Al-Krai’
10. Dr. Dalal Mukhlid Jahaz Al-Harbi
11. Dr. Zainab Muthanna Abdoh Abu Talib
12. Princess Sarah Bint Faisal Bin Abdul Aziz
13. Dr. Salwa Abdullah Fahd Al-Hazza’
14. Dr. Fatimah Muhammad Al-Qarni
15. Dr. Fadwa Salamah Owdah Abu Mraifah
16. Dr. Firdous Saud Muhammad Al-Saleh
17. Dr. Lubna Abdulrahman Al-Tayib Al-Ansari
18. Dr. Latifa Othman Ibrahim Al-Sha’lan
19. Dr. Mastourah Obeid Al-Shammari
20. Dr. Muna Abdullah Saeed Al Mushait
21. Dr. Muna Muhammad Saleh Al-Dowsari
22. Princess Moudhi Khaled Bin Abdul Aziz Al Saud
23. Dr. Moudhi Muhammad Abdulaziz Al-Deghaithir
24. Dr. Nihad Muhammad Saeed Ahmad Al-Hibshi
25. Dr. Noorah Abdulaziz Abdulrahman Al-Mubarak
26. Dr. Noorah Abdullah Ibrahim Al-Asqah
27. Dr. Noorah Abdullah Abdulrahman Al-Adwan
28. Huda Abdulrahman Saleh Al-Hilaisi
29. Dr. Haya Abdulaziz Nasser Al-Manee’
30. Dr. Wafa Mahmood Abdullah Taibah

2 comments:

  1. கடும்போக்கு சட்டத்தை
    கடைப்பிடிக்கும் சவூதியில் பொதுவாழ்வில் பெண்கள் சிறு பங்கையே வகிக்கிறார்கள்.

    what u mean by this .....

    ReplyDelete
  2. ROYAL FAMILY KING அப்துல்லாவுக்கு ஷியாக்கள் ..அதுவும் பெண் ஷீயாக்களும் தேவப்படுதோ........>>>>>.இப்போது சவூதி மக்களும் >> ஆண் .. துணை இல்லாமல் ரிசானா வந்ததும் குத்தம் தான் .... எடுத்த அரபியும் குத்தம்தான் ... துணை நின்ற சவூதி அரசாங்கமும் குத்தம்தான் ......விசாரித்த நீதிமன்றம் ,,,.. எல்லாருக்குமே தண்டனை கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஒருததருக்குமே கொடுத்திருக்கக்கூடாது இவர்கள் ...உலகத்துக்கு எங்களை காட்டுமிராண்டியாக்கி விட்டார்கள் என்று இப்பொழுது எழுதத் தொடங்கி விட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.