நூலகத்திற்கு 300 கோடி ரூபாய் சொத்துக்களை அன்பளிப்புச்செய்த 88 வயது மூதாட்டி
அமெரிக்காவில் எளிமையாக வாழ்ந்த, மூதாட்டி ஒருவர், 300 கோடி ரூபாய் சொத்தை, நூலகத்துக்கும், பூங்காவுக்கும் எழுதி வைத்துள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் பகுதியில் உள்ள, மன்ஹாட்டன் குடியிருப்பில் வசித்தவர் மேரி மெக்கோனல் வயது 88.
சமீபத்தில் இவர் இறந்து விட்டார். நியூயார்க்கில் உள்ள நூலகத்துக்கும், பிரதான பூங்காவுக்கும், தபால் மூலம் காசோலை வந்தது.இதை பிரித்து பார்த்த நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக, பூங்காவுக்கும், நூலகத்துக்கும் தனியாக வந்து செல்லும் மேரி, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார். மன்ஹாட்டன் பகுதியில், 40ம்ஆண்டுகளில் குடியேறிய மேரி, இதுவரை, தான் ஒரு செல்வந்தர் என்பதை வெளியே காட்டி கொண்டதில்லை. எல்லாருடன் எளிதாக பழகி, எளிமையாக வாழ்ந்துள்ளார்.
Post a Comment