Header Ads



மல்வத்தை ஓயா பள்ளியும், முஸ்லிம்களும் 3 மாதத்திற்குள் அகற்றம் - பிக்குகளுக்கு உறுதி


அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா பள்ளிவாசலையும், அங்கு வாழும் முஸ்லிம்களையும் அங்கிருந்து 3 மாதத்திற்குள் அகற்றப்படுவார்கள் என அநுராதபுர துணை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா பள்ளிவாசலையும், அங்கு வாழும் முஸ்லிம்களையும் அகற்றக்கோரி இன்று சனிக்கிழமை பௌத்த கடும் போக்காளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்தே இந்த உறுதிமொழி அநுராதபுர துணை அரசாங்க அதிபரினால் பௌத்த தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட சிங்கள கடும் போக்காளர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்று சென்றதாக கூறப்படுகிறது.

இந்தப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் மக்கள் குறித்து அரசின் உயர் மட்டத்தினருடன் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பேசுவதற்காக இருந்த தருணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான எம்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.



4 comments:

  1. Srilanka muslim kalai yaru kapathuwathu ya allah

    ReplyDelete
  2. உறக்கத்திலுள்ள , பிரிந்து செயற்படுகின்ற எமது முஸ்லிம் தலைமைகள் இப்போதாவது ஒன்று சேர்ந்து ஓரணியில் நின்று செயற்படுவார்களா?

    எமது முஸ்லிம் தலைமைகள் களத்தில் இறங்கி அரசுக்கு சவால் விடுக்கும் காலம் வந்து விட்டது.

    ReplyDelete
  3. முஸ்லிம் தலைமைகள் என்றால் யார் ? அரசியல் தலைவர்களா? அது நடக்காது. வழமை போல நிகழும் உலமா சபையும் போய் கதைங்க....!
    ஒரேயொரு வேண்டுகோள் முஸ்லிம் கவன்சில் & உலமா சபை என்றும் அரசியலில் கால் வேச்சிடதிங்க. இருக்கும் மரியாதையும் போயிடும்...!

    ReplyDelete
  4. Oru Sri Lankanaha naam enna saiyyap pohinrom sinthippom, seyalatra thodanguwom!!
    Allahu Akbar

    ReplyDelete

Powered by Blogger.