வள்ளம் கவிழ்ந்து 2 சிறுவர்கள் பரிதாப வபாத் - புடவைக்கட்டு ஆற்றில் சம்பவம்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புடவைக்கட்டு ஆற்றில் வள்ளம் குடைசாய்ந்ததில் இரு சிறுவர்கள் வபாத்தாகியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 8 பேர் புடவைக்கட்டு ஆற்றின் கலப்பு பகுதிக்கு மட்டி எடுப்பதற்காக சென்றபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 3 பெரியவர்களும் 5 சிறார்களும் சென்றதாகவும் விடுமுறை தினத்தை வினோத விளையாட்டில் கழிப்பதற்காகவே சென்றதாகவும் வள்ளத்தில் சென்ற ஒருவர் தேமித்தேமி அழுத வன்னம் தெரிவித்தார்.
வபாத்தான சிறார்களான றாசிக் பரீட் றிஸ்வானா (13) றுசான் முகம்மட் றுக்தி ( 06) ஆகிய இருவருடைய ஜனாஸாக்களும் குச்சவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,,
நேற்று சனிக்கிழமைகாலை 10.30மணியளவில் நபார் மௌலவி என்பவருடன் 08 பேரைக்கொண்ட ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்களே வள்ளத்தில் சென்றதாகவும்,அதில் ஒரு சிறுபிள்ளை வள்ளத்தின் தடியை பிடித்த வேளை நீரில் மூழ்கியதாகவும் அதனையடுத்து வள்ள ஓட்டுனரான நபார் மௌலவி சிறுமியை மீட்க முயற்சித்த போதே வள்ளம் குடைசாய்ந்ததாகவும் வள்ளத்தில் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
வள்ளத்தின் ஓட்டுனரான நபார் மௌலவி குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலதிக விசாரணைகளை குச்சசெளி மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment