கடலை வியாபாரியிடம் பறிமுதல் செய்த 27.5 ஆயிரம் கோடி மதிப்பு அமெரிக்க பில்கள்..!
இந்தியா - தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் வீட்டில் கைப்பற்றப்பட்டவை ரூ.27.5 கோடி அமெரிக்க போலி பில்கள் என தகவல் வெளியாகியுள்ளது. வருமானவரித் துறை அதிகாரிகள் நாளை அவரிடம் சென்னையில் 2வது கட்ட விசாரணை நடத்த உள்ளனர். தாராபுரத்தில் கடலை வியாபாரி ராமலிங்கம் வீட்டிலிருந்து கடந்த 31ம் தேதி ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அமெரிக்க பில்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். கடந்த 4ம் தேதி அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல்( புலனாய்வு) ஆர்.வி.மிஸ்ரா முன்னிலையில், கூடுதல் இயக்குனர் நாகபிரசாத், உதவி இயக்குனர் செந்தில் குமார் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து 10 மணி நேரம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான பில்களை நான் தான் வாங்கினேன். நான் யாருக்கும் பினாமி கிடையாது.
அரசியல் பின்புலமும் இல்லை என ராமலிங்கம் கூறி உள்ளார். பல கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக ராமலிங்கம் பதில் அளித்ததால் போதுமான தகவல்களை அவரிடமிருந்து பெறமுடியாமல் அதிகாரிகள் திண்டாடினர். இருப்பினும் தங்கபத்திரத்துக்கு ஈடான பில்களின் உண்மை தன்மை குறித்து அறிய அதிகாரிகள் அவற்றை மும்பையில் உள்ள வருமானவரித்துறை தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளதால் அடுத்த கட்ட விசாரணையை 11ம் தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்தனர். பத்திரங்கள் போலி: இந்நிலையில் மும்பையில் ஆவணங்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வதற்கு ராமலிங்கத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க பில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை போலி என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கோவையில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இதை உறுதி செய்ய மறுத்து விட்டனர். இன்று ராமலிங்கத்திடம் விசாரணை நடைபெறும் போது இது பற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக ராமலிங்கம் இன்று இரவு மீண்டும் தனது வக்கீல் இளங்கோவுடன் சென்னை புறப்படுகிறார்.
Post a Comment