வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மலாலா - நோபல் பரிசு வழங்க 2.5 இலட்சம் பேர் மனு
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து மலாலா யூசுப்சாய் என்ற 15 வயது சிறுமி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தலிபான்களால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் லண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா குணமடைந்ததையடுத்து, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு மேலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் இம்மாத கடைசியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
பெண்களுக்கு கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கும் தலிபான் ஆதிக்கத்தை எதிர்க்கும் சர்வதேச அடையாளமாக மாறியுள்ள மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று 2.5 லட்சம் மக்கள் ஆன்லைன் மூலம் மனு அனுப்பியுள்ளனர்.
Well said Kamran.
ReplyDelete