பிரேசில் இரவு நேரக் களியாட்ட விடுதியில் தீ - 230 பேர் பலி (வீடியோ)
பிரேசில் தெற்கிலுள்ள சண்டா மரியா நகர இரவு நேரக் களியாட்ட விடுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 230 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிஸ் நைட் கிளப் என்ற இரவு நேரக் களியாட்ட விடுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடுதியில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரியின்போது மேற்கொள்ளப்பட்ட வாணவேடிக்கையால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விபத்து இடம்பெற்ற போது குறித்த விடுதியில் 500 க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர் என்றும் இவர்களில் பலர் உடல் கருகியும், மூச்சுத்திணறலுக்கு உட்பட்டுமே உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு வரை 230 இற்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மீட்புப் பணியில் ஈடுபட்ட இராணுவ மேஜர் ஜெர்சன் டாரோசா பெரரா, இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
Post a Comment