காத்தான்குடி தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 23வது வருடாந்த விழா (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு –காத்தான்குடி தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 23வது வருடாந்த தராதரப் பத்திரம் வழங்கும் விழாவும் மெத்தைப் பள்ளி குர் ஆன் மத்தரசாவின் தராதரப் பத்திரம் வழங்கும் இரு விழாவும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி முஹைத்தீன் மெத்தைப் பெரிய பள்ளி ஜூம்மா பள்ளிவாயல் மேல்மாடியில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவரும் இப்பள்ளிவாயளின் தலைவருமான மர்சூக் அஹமட்லெப்வை தலைமையில் இடம்பெற்றது.
இவ்வருடம் தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையால் இடம்பெறும் தஜ்வீத் பரீட்சையில் சித்தியடைந்த 89 மாணவ மாணவிகளும்,குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சபையினால் நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மெத்தைப் பள்ளி குர் ஆன் மத்தரசாவின் 20 மாணவர்களும் 'தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள்' மெத்தைப் பள்ளி குர் ஆன் மத்தரசா முஅல்லிம்கள் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த குர் ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சபையின் தலைவரும்,ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரின் அதிபருமான செய்குல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி மற்றும் கௌரவ அதிதிகளான காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியிள் சிரேஸ்ட விரிவுரையாளர் கவிமனி எம்.எச்.எம்.புகாரி பலாஹி காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு செயலாளருமான யு.எல்.எம்.என்.மூபீன் , மட்டக்களப்பு,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அலியார் பாலாஹி'ஸ்ரீ.ல.சு.க. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றவூப் ஏ மஜீட் ஆகியோரினால் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு மாணவ மாணவியர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றது.
இதன் போது கௌரவ அதிதி மஃஹதுஸ் ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லூரின் அதிபர் எம்.ஏ.சி.எம்.ஸெயினுலாப்தீன் மதனியினால் சிறப்புரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் மஃஹதுஸ் ஸூன்னா பெண்கள் அறபுக்கல்லூரின் தலைவர் றிஸ்வான் மதனி மற்றும் கூட்டுறவுப் பரிசோதகர் உஸனார் மற்றும் உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்'வர்த்தகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Post a Comment