2050ம் ஆண்டு இலங்கையின் சனத்தொகையில் அரைவாசி பேருக்கு நீரிழிவு நோய்
நீரிழிவு நோயின் தாக்கம் இலங்கையில் பாரிய அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 2050ம் ஆண்டளவில் இலங்கையின் ஜனத்தொகையில் அரைவாசி பேர் இந்த நோய்க்கு உள்ளாவார்கள் என அமைச்சு எச்சரித்துள்ளது.
தொற்றா நோய்கள் வரிசையில் நீரிழிவு நோய் இலங்கையில் மிக முன்னணியில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, இளம்பராய மாணவர்களிடையேயும் நீரிழிவு நோய் 10 முதல் 15 சதவீதம் அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நீரிழிவு நோய் உட்பட தொற்றா நோய்களின் பாதிப்பு காரணமாக நாளாந்தம் 650 பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. sfm
Post a Comment