கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சபை அமர்வு (படங்கள்)
(சௌஜீர் ஏ முகைடீன்)
கல்முனை மாநகர சபையின் 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சபை அமர்வு மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று (10.01.2013) மாலை மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது இடம்பெற்ற சில நிகழ்வுகள்
றிசானா நபீக்கிற்கு மௌன பிரார்தனை
முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட றிசானா நபீக்கை நினைவு கூர்ந்து சபை இரண்டு நிமிடம் மௌன பிரார்தனையில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.
வெள்ள நீரை அகற்ற நள்ளிரவிலும் செயற்பட்ட முதல்வருக்கு பாராட்டு
கடந்தகாலங்களில் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது நள்ளிரவு என்று பாராது உரிய பிரதேசங்களுக்குச் சென்று வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்ட முதல்வருக்கு உறுப்பினர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியிடம் பிரேரனை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டுகோள்
இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடரில் அனுராதபுரத்தில் மல்வத்து ஓயா என்னும் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை இனவாத கும்பலொன்று நள்ளிரவு வேளையில் தாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்லாது இன்று சில பௌத்த பிக்குகள் “ஹலால் என்ற வாசகத்தை உபயோகப்படுத்தக் கூடாது” என துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு பாதயாத்திரைகளை நடத்திவருகின்றனர். ஆனால் இஸ்லாமியர்கள் ஹலாலான உணவுகளை உட் கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படை கொள்கையோடு தொடர்புபட்ட விடயம். தத்தம் மதத்தை பின் பற்றுகின்ற மத சுதந்திரமுள்ள இந்த ஜனனாயக இலங்கை நாட்டில் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களிற்கும் எதிராக குறிப்பிட்ட சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற மேற்படி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி உதவியினை கோரி பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.
மருதமுனை வீட்டுத்திட்டத்திற்கு “மருதூர்க்கனி புரம்” என பெயர் சூட்டு
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களில் ஒரு பகுதியினர் மேட்டுவட்டை மூன்றாம் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இன்றுவரை இந்த வீட்டுத்திட்டத்திற்கு நிரந்தர பெயர் இடப்படாமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக மின்சார இணைப்பு, நீர் இணைப்பு தேவைகளின்போது முகவரியிடல் போன்ற விடயங்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. எனவே இப்பிரதேச சங்கங்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கழக அங்கத்தவர்கள் விரும்புகின்ற “மருதூர்க்கனி புரம்” என்னும் புதிய நாமத்தை சூட்டுமாறு கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை மாநகர உறுப்பினர் எம்.எஸ்.உமர்அலியினால் கொண்டுவரப்பட்டு மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
நன்றி மேயரே .......
ReplyDeleteஇதுக்குத்தான் படிச்சவனும், உசாரா இருக்கிறவெனும், பதவிக்குவருனும் என்கிறது.
அதுக்கு அக்கரை ஊரில் ஒருவன் ......
புறா புடிக்கத்தான் லாயக்கு ......