Header Ads



2 கோடி 60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரான் பிரஜை கைது



(Tm) இரண்டு கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரான் நாட்டு பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

தன்னுடைய பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை  மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு  முற்பட்டவேளையிலேயே அவரை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு கிலோகிராம் நிறைகொண்ட போதைப்பொருளையே குறித்த சந்தேகநபர் தன்னுடைய பயணப்பொதியில் ரெக்சினுக்குள் மறைத்து எடுத்துவந்திருந்தார் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.