ஜப்பானில் 17 லட்சம் டாலருக்கு ஏலம் போன அரிய வகை மீன்
ஜப்பானில் உள்ள சுகிஜி மீன் மார்கெட்டில் தினந்தோறும் பல மில்லியன் டாலருக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புகழ் பெற்ற இந்த மார்க்கெட்டில் இந்த ஆண்டிற்கான முதலாவது மீன் ஏலம் இன்று விடப்பட்டது. அப்போது 222 கிலோ எடையுள்ள ஒரு புளுபின் ட்யூனா வகை மீன் ஏலத்திற்கு வந்தது.
இந்த ஆண்டின் முதலாவது ஏலம் என்பதால் அதை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது. இதில் அந்த மீன் 155 மில்லியன் யென்னுக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஜப்பானில் இந்த புளுபின் ட்யூனா வகை மீன்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஒரு கிலோ எடையுள்ள இந்த மீனின் விலை சுமார் 7600 டாலருக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.
இது கடந்த ஆண்டு முதலாவது ஏலம் எடுத்த தொகையான 55 மில்லியன் யென்னை காட்டிலும், இது இருமடங்கு அதிகம் என்று ஏலம் எடுத்தவர் கூறினார். அந்த மீனின் எடைக்கோ அல்லது தன்மைக்காகவோ இந்த விலை கிடைக்கவில்லை. விளம்பரத்திற்காகவே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ட்யூனா வகை மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் எதிர்ப்புக்கிடையே இந்த ஏலம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment