17 லட்சம் செயற்கை மனித கருக்கள் மண்ணில் புதைப்பு
குழந்தை இல்லாதவர்களுக்கு செயற்கை கருவூட்டல் (சோதனை குழாய்) மூலம் குழந்தை பேறு வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இம்முறையில் குழந்தை பெறுவது அதிகமாக உள்ளது. எனவே, அங்கு செயற்கை கரு உருவாக்குவது அதிகரித்துள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் இதுவரை 35 லட்சம் மனித கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், சமீபகாலமாக இங்கு செயற்கை முறையில் உருவாகும் மனித கருக்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எனவே, அந்த கருக்களின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதால் அழிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தற்போது 17 லட்சம் செயற்கை மனித கருக்கள் வீணாகியதால் மண்ணில் புதைக்கப்பட்டன.
Post a Comment