''உலக நாடுகளில் ஊடக சுதந்திரம்'' இலங்கை 163, பின்லாந்து 1, எதித்திரியா 179
ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 163 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. எல்லையற்ற அமைப்பு 2011 – 2012 ஆம் ஆண்டுகளை அடிப்படையாகக் வைத்து மேற்கொண்ட தரவரிசையிலேயே இலங்கை மேற்படி இடத்தினைப் பெற்றுள்ளது. குறித்த தரவரிசை பட்டியலில் 179 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்து – உலகில் சிறப்பான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக பின்லாந்து இனங்காணப்பட்டுள்ளது. நோர்வே 02,எஸ்தோனியா-03,நெதர்லான்ட் - 04, அவுஸ்திரேலியா- 05 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.
அதேவேளை, 179 ஆவது இடத்தில், உலகில் மிகவும் மோசமான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக எதித்திரியா உள்ளது.
ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2010 ஆம் ஆண்டு 178 நாடுகளைக் கொண்டு தயாரித்த பட்டியலில் இலங்கை 158 ஆவது இடத்தினையும், 2009 ஆம் ஆண்டு 162 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு தயாரித்திருந்த இவ்வாறான பட்டியலில் இலங்கை 51 ஆவது இடத்தினைப் பெற்று – ஊடக சுதந்திரத்தில் முன்னேறிய நாடாகக் கருததப்பட்டது.
வாழ்த்துக்கள்,
ReplyDeleteநமக்கு கீழேயும் ஆளுண்டு.
பின்னாலிருந்து கவுண்ட் பண்ணினா நாம 17 வது இடத்தில்.
இதை முன்கூட்டி அறிந்து நடந்ததுதானோ ஆரிப் சம்சுதீனின்...
ஊடகவியலாளர்களுடனான "சிநேக பூர்வ சந்திப்பு".
தப்பாச்சே !
ஊடகவியலாளர்களுக்கான எல்லை அற்ற அமைப்புக்கு தெரியாதா நம்ம ஹசன் அலியின் ஊடகங்களுடனான நெருக்கத்தை ??????????????