எகிப்து ஜனாதிபதி அலுவலகம்முன் குண்டுத் தாக்குதல் - 15 பேர் காயம்
எகிப்தில் அதிபர் முகமது முர்சிக்கு எதிராக சிலர் போராடி வருகின்றனர். இதற்காக அதிபர் மாளிகை முன்பு கூடாரங்களை அமைத்து அதில் தங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி போலீசாரும், ராணுவமும் வற்புறுத்தினர்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டக்காரர்களின் கூடாரம் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ரப்பர் குண்டு களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அதில், ஒரு போலீஸ் அதிகாரி, 6 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment