பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போராளிகளை ஒழிக்க 15 இலட்சம் கோடி ஒதுக்கீடு
அமெரிக்க பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 105 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறி சட்டவடிவமாக்கப்பட்டு அதிபர் ஒபாமாவின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இந்த நிலையில் ஹவாய் தீவில் விடுமுறையை கழித்து வரும் ஒபாமா அமெரிக்க ராணுவத்துக்கு செலவிடப்பட உள்ள அதாவது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.105 லட்சம் கோடிக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனுக்கு ரூ.90 லட்சம் கோடியும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் போராளிகளை ஒழிக்க ரூ1.5 லட்சம் கோடியும் அடங்கும்.
இதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்ட பிறகு அதிபர் ஒபாமா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ராணுவ வீரர்கள் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும், உலகிலேயே அமெரிக்க ராணுவம் பலம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கவும் இந்த தொகைக்கு ஒப்புதல் வழங்கினேன் என்றார்.
The process of wasting
ReplyDelete