Header Ads



சகோதரி றிஸானாவின் அந்த இறுதி நேரம் - (நேரம் 11.40)



(மூதூர் பிராந்திய நிருபர் எமது இணையத்திற்கு எழுதியனுப்பு கட்டுரை இது)

(மூதூர் முறாசில்)

றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் 'குஞ்சி' வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும் உட்பக்கத்தில்  றிஸானாவின் தாய் உறவினர்கள் சூழ்ந்திருக்க அழுது கொண்டிருக்கும் அவலத்தைக் காணக்கிடைத்தது.

நான் அங்கு நிற்பதை   றிஸானாவின் தாயார் எப்படியோ அவதானித்து விட்டார். அந்தோ அழுகைச் சத்தம் சற்று அதிகரித்தது... 'பொய்யைச் சொல்லி போட்டிங்கள... எண்ட புள்ள எங்க...? என்ற வாசகம் திடீரென என்   காதில் வந்து குத்தியது. அப்போதுதான் நான் அவரிடம் சொன்ன 'பொய ;' எனக்கே  ஞாபனத்திற்கு வந்தது!

சில வாரங்களுக்கு முன்பு றிஸானாவின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது  ஒரு சகோதர இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் றிஸானாவின் தாயிடம் கூறும்படி கூறியதையே(பொய்யை) நானும் கூறினேன்.  அக்கூற்று பொய்த்து விட்டதனாலேயே நானும் அவ்வேளையில்  பொய்யனாகி விட்டேன்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் என்னிடம் சொன்ன அந்தப் பொய்யின் சுருக்கம் இதுதான். 'றிஸானாவின் விடுதலைக்காக தீவிரமாக முயற்சித்து வருகின்றேன்... உங்கள் வீட்டிற்கு இனி வருவதாக இருந்தால் றிஸானாவையும் அழைத்துக் கொண்டுதான் வருவேன்... எனது முயற்சி வெற்றிபெற உங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்....' 

குறித்த கூற்றின் மூலம் கூற்றுக்குச் சொந்தக் காரரும் நானும் பொய்யனாகி விட்டபோதும் 'எனது முயற்சி வெற்றிபெற உங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்...' என்று அவர் சொன்னதும் அதனை நான் 'அவரது முயற்சி வெற்றிபெற அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள்' என்று கூறியதும் இங்கு எவரும் திட்டமிட்டு பொய் சொல்ல வில்லை என்பதையே புலப்படுத்துகிறது என்று கூறுவதன் மூலம் என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கின்றேன்.

றிஸானாவின் தாயாரின் எதிர்பார்ப்பு :

றிஸானாவின்; தாயாரின் ஒரே  எதிர்பார்ப்பு எப்படியாவது தனது மகளை மீட்டிக் கொள்ள வேண்டும் என்பதேயாகும். இதனாலேயே தன்னைச் சந்திக்க வரும் அனைவரிடமும் றிஸானாவின் விடுதலை பற்றியே அவர் பேசுவார். தனது குடும்ப நிலைமையைக் கவனத்திற் கொண்டு    வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கோ, வாழ்வாதார வசதிகளை வழங்குவதற்கோ சிலர்  முன்வந்தபோதும் அவ்வுதவிகளை ஏற்க மறுத்த அவர்,  அவர்களிடம் கூறியதெல்லாம்  தனது மகளுக்கு விடுதலை பெற்றுத்தாருங்கள் என்பதைத்தான்.

றிஸானாவின்; தாயாரதும் அவரது குடும்பத்தவர்களதும் எதிர்பார்;ப்பு  மட்டுமன்றி மூதூர் பிரதேச மக்களினதும் தாய் நாட்டினதும் கூறப் போனால் மொத்த உலகத்தினதும் எதிர்பார்ப்பும்  றிஸானா விடுதலைபெறவேண்டும் என்பதாகவே இருந்தது. 

இருந்தபோதும் 'ஷரீஆ' சட்டப்படி றிஸானாவின்  விடுதலைக்காக இருந்த ஒரேயொரு வாயிலான  மரணித்த குழந்தையினது குடும்பத்தவரது (தாயாரின்) மன்னிப்பு என்னும் வாயில் மூடப்பட்டதனால்; அனைவரது எதிர்பார்ப்பும் வெறுமையாகி விட்டது.

றிஸானாவின் அந்த இறுதி நேரம்:  (11.40)

அல்லாஹுதஆலா ஒருவரது மரணத்தை  நிச்சயிக்கின்ற போது மனிதர்களாகிய நாம் கூறத்தக்கவாறு காரணங்களும் வந்து வாய்த்து விடுகின்றன. அதனால் அல்லாஹுதஆலாவின் ஏற்பாட்டை மறந்துவிட்டு மரணத்திற்கான காரணத்தை மட்டும்  நாம் விவாதிப்பதால் பலனில்லை.சகோதரி  றிஸானாவிற்கு ஏற்பட்ட முடிவையும் இந்த வகையிலேயே நாம் நோக்க வேண்டும். 

றிஸானாவிற்கு அந்த இறுதி நேரத்திற்கு முன்பு இறுதி ஆசை சம்பந்தமாக வினவப்பட்டபோது ஒன்று- இரண்டு 'ரகஆத்' தொழுது அல்லாஹ்விடம் உரையாட வேண்டும் என்றும் மற்றது தன்னிடமிருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும்  கூறியதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாசை பொறுப்பேற்கப்பட்டதன் பின்பு றியாத்திலுள்ள 'தாஹிலுல் ஸிஜ்ள்' என்னும் உள்ளக சிறையில் புதன் கிழமையன்று (2013.01.09) சரியாக  11: 40 மணியளவில் றிஸானாவிற்கு அந்த  இறுதி நேரம்  எற்பட்டுள்ளது. (இன்னா இல்லாஹி வஇன்னாஹ் இலைஹி ராஜிஊன்)


மூதூர் முக்கியஸ்தர்களின் முக்கியமான கலந்துரையாடல்:

றிஸானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதனை தொடர்ந்து  முக்கியஸ்தர்களின் கலந்துரையாடலொன்று  புதன் கிழமையன்று (2013.01.09) இரவு மூதூரில் இடம்பெற்றது.

மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மொளவி எம்.எம். கரீம் நத்வி தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் ஜம்மியதுல் உலமா,கதீப்மார்கள் சம்மேளனம், மூதூர்  பள்ளிவாசல்கள் சம்மேளனம்    முதலானவற்றின் பிரதிநிதிகளோடு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது பின்வரும்  தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அத்தீர்மானங்களின் முக்கியத்துவம் கருதி அவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.

1. 'ஷரீஆ' சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றோம். 

2. மரணித்த குழந்தையின் தாயிடம் றிஸானாவை மன்னிக்கும் படி கோரிய அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மூதூர் பிரதேச மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

3. 'ஷரீஆ' சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சம்பந்தமான சரியான புரிதலை சகோதர இனத்தவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு முயலுகின்றோம்.

4. றிஸானாவின் குடும்பத்தவரது அவல நிலையைப் போக்கும் வகையில் நலன்புரிச் சேவைகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ளவர்களை அழைக்கின்றோம்.

5. 'ஷரீஆ' சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக எந்தவோர் வகையிலும் எவரும் செயற்படாதிருப்பதற்கு அனைவரும் இணங்கிக் கொள்கின்றோம்.

6. மரண தண்டனைக்குள்ளான சகோதரியின் மறுமைவாழ்வு ஜெயம் பெறுவதற்கு அல்லாஹ்வைப் பிரார்த்திக்குமாறு  அனைத்து உள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றோம். 

றிஸானா கற்றுத்தந்த பாடம்: 

றிஸானா பள்ளிப் பருவத்தில் ஏன் ஒரு பணிப்பெண்ணாக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஒரு கேள்வியைக் கேட்டாள் அதற்கு பூரணமான விடை ஒரு முறை அவரது வீட்டை சென்று பார்த்தாலே போதும் புரிந்து விடும்! குடியிருப்பதற்கு  வீடில்லை,சொல்லுமளவில் வேறு வசதிகள் என்று எதுவுமேயில்லை.

அதற்குள் நான்கு பிள்ளைச் செல்வங்களில் மூவர் பெண் பிள்ளைகளாவர். றிஸானாவின் தந்தைக்கு நிரந்தர தொழிலில்லை. போதிய வருமானமும் இல்லை. இத்தகைய பின்புலத்தில் றிஸானாவினால் சிறப்பாக படிக்கவும் முடியவில்லை.

இதனால்  இருப்பதற்கு ஒரு வீட்டைக் கட்ட வேண்டும். தனது தங்கைகளை நன்றாகப் படிப்பிக்கச் செய்ய வேண்டும். இற்கு இருக்கும் வழிகளில் இலகுவான வழிதான் வெளிநாடு செல்வது. அந்த வழியைத்தான் றிஸானாவினால்  தேர்ந்தெடுக்கவும் முடிந்தது.

றிஸானா வெளிநாடு சென்றது அவரது குற்றமில்லை. அவரது குடும்பத்தவரது குற்றமுமில்லை. கேடு கெட்ட இந்த சமூகத்தின் குற்றம். ஏழை வரியை சரியாக எடுக்கவும் கொடுக்வும் திட்டமிடல் இல்லாத இந்த சமூகம், ஆண்களுக்கு வழங்கவேண்டிய 2 பங்கு சொத்துரிமையை புறக்கணித்த இந்த சமூகம், மஹருக்கு பதிலாக சீதனத்தை முதன்மைப்படுத்திய இந்த சமூகம்,  பெண்கள் வெளிநாடு சென்று உழைப்பதை ஆகுமாக்கிக் கொண்ட இந்த சமூகம் செய்த குற்றம்!

எனவே, றிஸானா கற்றுத்தந்த பாடத்திலிருந்து படிப்பினை பெறுவோம்.இஸ்லாத்திற்கெதிரான  சமூக மரபுகளை உடைத்தெறிந்து ஈமானிய சமூகத்தை சமைப்பதற்கு ஒன்றிணைவோம். அதற்காக பேசுவோம், அதற்காக எழுதுவோம், அதற்காக அழைப்போம் வாருங்கள் சகோதரர்களே...!





13 comments:

  1. ரிஸானாவின் மரணம் அவர் குற்றமல்ல...அவரது குடும்பத்தினதும் குற்றமல்ல..அரேபிய அரசினதும் குற்றமல்ல...அந்த அரேபியத் தாயினதும் குற்றமல்ல... நாம் ஒவ்வொருவரும் இதற்கு இம்மையிலும் மறுமையிலும் பதில் கூறவேண்டிய குற்றவாளிகளாவோம்...

    ReplyDelete
  2. எல்லாவற்றையும் அல்லாஹ்வே அறிந்தவன்.

    அவனே நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி புரிபவன்.
    பொறுமை ஆளர்களோடு அல்லாஹ் இருகிறான்.

    முடிந்தால் ஏதாவது வங்கி கணக்கை பிரசுரிக்கவும்.

    ReplyDelete
  3. நாம் எமது புனித ஷரீஆ சட்டத்தை ஒருபோது குறை காண முடியாது. அது புனித மானது அதுவே குற்றம் அனைத்துக்கும் சிறந்த தண்டனையை வழங் குகிறது . அது தொடர்பில் ஒருவருக்கும் விவாதிக்க முடியாது, விவாதிக்கவும் கூடாது. ஆனால் சவுதியில் 100% ஷரீஆ சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா ? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு அமுல்படுத்தப்படுமானால் மஹரம் துணை இல்லாத பெண்களை அந்த நாடு எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்? மஹரம் இல்லாது கன்னிப்பெண்கள் சவுதிக்கு பிரயாணம் செய்ய எப்படி சவுதி ஷரியத் சட்டம் அனுமதிக்க முடியும்? சவுதி அரசாங்கம் ஏன் அவற்றை தடை செய்வதில்லை? இது சுத்த ஹராம் இல்லையா? அவர்களுக்கு (அரபிகளுக்கு) ஒரு சட்டம், அஜமிகளுக்கு வேறு சட்டம் அங்கு தொழில் செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு இன்னுமொரு சட்டமா? இது அநீதி இல்லையா?

    ReplyDelete
  4. அரேபியாவினை கொண்டு இஸ்லாதினில் தவறான விளக்கம்/ விமர்சனம் கொள்ள வேண்டியதில்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போதும் சவூதி / அரேபியாவைப் பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை. மாறாக, அல் குரான் மற்றும் எனது முன்மாதிரியினை பின்பற்றுங்கள் என்று தான் கூறி இருக்கிறார்கள்.

    இஸ்லாமிய சரீஆ சட்டம் சரியாக வகுக்கப்பட்டு, அதனுடைய தண்டனை அமைப்பை சகல சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றல் போல் நான்கு இமாம்களாலும் பிக்ஹு என்று சொல்லப்படும் சட்டக்கோவை வகுக்கபட்டிருக்கிறது.

    ஆனால் இந்த சவூதி 17 ம் நூற்றாண்டின் பின்னர் அதனை எடுத்துகொள்ளாமல் "சுவாதி" எனும் அப்போதய சவூதி மன்னனும் "வஹாப்" எனும் ஒருவரும் (the founder of Wahhabi movement) உருவாக்கிய குழப்ப நிலைதான் இன்று உலகம் முழுதும் சவூதி /அரேபியாவின் சட்டத்தினை இஸ்லாமிய சட்டம்தான் என்று நம்பி விமர்சிர்த்துக் கொண்டிருக்கிரார்கள்.

    இந்த வஹபிச ஏஜெண்டுகள் இலங்கையிலும் (மூதூரிலும் ) இருப்பதனால் தான் இந்த சட்டம் சரி என்ற தெறிப்பு காணப்படுகிறது

    ReplyDelete
  5. இனியும் ஒரு றிசானா உருவாவதில் இருந்து காப்பதற்கு.. சக்காத்தினை கூட்டாக கொடுப்போம்...!
    றிசானாவின் குடும்பம் போல் பல நூறு குடும்பங்கள் இலங்கையில் உள்ளது...! அவர்களும் இவ்வாறான விபத்தில் சிக்குவதில் இருந்து பாது காப்போம்...!

    ReplyDelete
  6. We are not blaming Sharia. Its not for a debate at this point but the way it is implemented particularly in Saudi Arabia is wrong. For the brothers & sisters who have been to Saudi know how foreigners (specially Asians) are treated and accused in case of a problem or dispute. In Rizana's case there is a huge possibility of miscarriage of justice.
    Firstly there is no autopsy to verify how the child died so anything based on assumption is completely wrong. Sharia didnt say to assume things whereas it need a solid proof before you chop off someone's head. Sharia didnt condone torture or obtain the evidence under duress.
    The outcome of their meeting in Mutur was nothing commendable. They should have addressed the root cause of the problems. i.e the fundamental problem of all this is poverty and dowry so they should
    1. Do their duty to collect and distribute Zakat properly.
    2. Encourage men to go to work or go abroad instead sending their mother, wives and daughters (its very high in Trinco district though)
    3. Ban dowry and preach and promote people to get marry for the sake of Allah but not for money or material.

    There are thousands of ways and I have listed few. So all the keyboard warriors please stop blaming Sharia & we all are part of the problem. So first will decide are we ready to help at least few Rizanas from this poverty by providing a life for the sake of Allah?, if not.. there will be more Rizanas in the future who will face similar if not worse.

    ReplyDelete
  7. சரியா சட்டம் என்ற பெயரில் அச்சட்டத்தையும் கொச்சைப்படுத்தி அநியாயமாக ஒரு ஏழைப்பென்னை கொலை செய்து விட்டார்கள் சவுதி அராபிய காட்டு மிராண்டிகள். இதில் மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவெனில், ரிசானா நபீக் விடயத்தில் திட்டமான அநியாயம் நடந்திருப்பது தெரிந்தும் அதை நியாயம் கற்பிக்க முயலும் சிலரைப்பற்றி நினைக்கும்போதுதான்!!!! இத்தகயவர்களிடம் ஒன்று மட்டும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் " ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டும் பொழுது அக்குழந்தை எதிர்பாராத விதமாக மூச்சுத்திணறி இறந்துவிடுகிறது" இப்பொழுது அந்த தாய்க்கு மரண தண்டனை கொடுப்பது நியாயமா???? அடுக்குமா???? உங்களது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் காண்பிப்பத்தட்கு ஒரு திட்டமான அநியாயத்தை நியாயப்படுத்த முனையாதீர்கள், மேலும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.

    உலகமே இஸ்லாத்தையும் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் நோக்கி ஆசையுடன் அணுகிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயமாக இது போன்ற ஒரு திட்டவட்டமான அநியாயம், இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய சட்டதிட்டங்களிட்கும் அந்நியவர்கள் மத்தியில் மாபெரும் இழுக்கை ஏற்படுத்திவிட்டது என்பது மாத்திரம் உறுதி. எனவே இவ் அநியாயத்தை சரியா சட்டமென்பதிலிருந்து விடுத்து திட்டமான ஒரு பக்கச்சார்புள்ள அநியாயம்தான் என தெளிவு படுத்துங்கள்.

    ReplyDelete
  8. RIZANA NAFEEK has open a new page in our era. Now all our ulmaas and every true muslims should try to stop sending our girls for these types of forieng jobs and to make some good plans in her name creating a ZAKAATH FUND in area wise or distict wise to save our muslim womens . the sympathies should not be regular ones to forget in three days

    ReplyDelete
  9. Dear Brothers, if she wrong she will get good even if she good she will get good but by your comments why you are misusing the islam, mr. ROOMY DO NOT YOU KNOW STILL SUNNA WHAT WHEN YOU WILL COME TO KNOW REALL, SHOW ME YOUR PROOF,

    ReplyDelete
  10. RIZANA FOUNDATION TO QUENCH THE NEEDS OF NEEDY

    ReplyDelete
  11. @roomy நீங்கள் கூறிய வஹ்ஹபி + சஊதி ஆட்சிக்கு முன்னுள்ள அரேபியா பற்றி உங்களுக்கு தெரியுமா??? அதற்காக சஊதி அரேபியாவில் 100% இஸ்லாமிய ஆட்சி நடப்பதாய் நான் சொல்லவில்லை. நுனிப்புல் ஆசாமியை இருக்க வேண்டாம். அந்த நாட்டின் பொறிக்குள் ரிசானாவை மாட்டிய கிழக்கிலங்கை சீதனம் வாங்கும் கேடு கெட்ட (sorry கேடான ) இளைஞர்கள் தான் முதலில் பதில் சொல்ல வேண்டும். அடுத்து ரிசானாவின் தந்தை. அடுத்து ரிசானாவின் தந்தைக்கு உட்பட இவ்வும்மத்துக்கு "உணவளிப்பவன் அல்லாஹ் தான், கஷ்டத்தில் அவனையே நம்பி நிற்க வேண்டும்" என்று உணர வைக்கா உலமாக்கள்... இப்படி இங்கயே லிஸ்ட் நீளுது. இதையெல்லாம் விட்டுவிட்டு உங்க பிரச்சினை வஹ்ஹாபி..

    ReplyDelete
  12. இங்கு வீண் விவாதம் செய்ய தேவையில்லை. சகலவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் மாத்திரமே. அவனிடமே துஆ கேளுங்கள். யா அல்லாஹ் இதைப்போன்ற மேலும் எத்தனை றிசானாக்கள் உள்ளார்களோ அவர்களுக்கு பொருள் உதவிகள் வழங்கி துஆச் செய்வோமாக. ஆமீன்

    ReplyDelete
  13. Rizana Rafeekin kudumpathai rizanavinal thiripthippaduthththa irivan maranathin pinnar thiripthiyakiullan allam avanikondu than nadiparukinrathu Allahu Akbar

    ReplyDelete

Powered by Blogger.