Header Ads



பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தரம் 11 வரை வகுப்புகளை ஆரம்பித்தல்


அன்புடையீர்,
    அஸ்ஸலாமு அலைக்கும்.

ஊவா மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியான, எமது வித்தியாலயம் 2009 ஆம் ஆண்டில் தரம் 01 முதல் 03 வரை வகுப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது தரம் 07 வரைக்கும் வகுப்புகளைக் கொண்டு இயங்கிக் கொண்டுள்ளது. இன்ஷh அல்லாஹ் 2013 ஆம் ஆண்டு முதல் 2ம் நிலை (Type II School) பாடசாலையாக கல்வித் திணைக்களத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

நாளுக்கு நாள் ஒழுக்க சீர்கேடுகளின் செய்திகளால் அதிர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் எமது சமூகத்தின் பெற்றார்கள், தமது பெண்பிள்ளைகளின் சீர்கல்விக்கு வழிதேடும் இக்காலத்தில் எமது இம்முயற்சி சிறந்த தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

அல்ஹம்துலில்லாஹ் எமது முஸ்லிம் மாணவிகள் கலாசார ஒழுக்கத்துடனான சிறப்பான கல்வியை வழங்கும் உயரிய நோக்கில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புடன், தேர்ச்சி பெற்ற சிறந்த ஆசிரியர் குழாமின் வழிகாட்டல்களின் கீழ் கடந்த வருடங்களில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியிலான சிறப்பான பெறுபேறுகளை வழங்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

அதேபோல் தமிழ் மொழித்தினம், ஆங்கில தினம், தேசிய ரீதியிலான கட்டுரைப் போட்டிகள் போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தேசிய, மாகாண,மாவட்ட மட்டங்களில் பல சாதனைகளையும் கடந்த 4 வருட காலங்களுக்குள் இம்மாணவிகளின் சாதனைகளாக வெளிக் கொணரப்பட்டுள்ளது. 

அந்த வகையில் 2013 ஜனவரி முதல் தரம் 10 வரை வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. 2013 தரம் 06,07 வகுப்புகளில் ஆங்கில மொழிமூல (நுபெடiளா ஆநனரைஅ டில டுiபெரயட - ஈரூடக மொழி)   வகுப்புகள் அடங்கலாக தரம் 07,08,09,10 வரை மாணவர்களை தெரிவு செய்து அனுமதிக்கப்படவுள்ளதால்  உங்கள் பிள்ளைகளின் விண்ணப்பங்களை மேற்படி விலாசத்திற்கு எதிர்வரும் 02.01.2013 அன்றோ அதற்கு முன்போ அனுப்பி வைக்கவும். 

இன்ஷh அல்லாஹ் 2014 க.பொ.த சாதாரண தரத்தில் சிறப்பான பெறுபேறுகளை இலக்காகக் கொண்டு திட்டமொன்றின் கீழ் மாணவிகள் பயிற்றுவிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிப் பிரதேச மாணவிகளுக்கான தங்குமிட வசதிகள் ஒழுங்கு செய்துத் தருவதற்கான ஏற்பாடுகள் உண்டு.

தொடர்புகளுக்கு கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

அதிபர் செயலாளர் இணைப்பாளர்
077-1679518 077-0881666 077-7831451

வஸ்ஸலாம்.
செயலாளர்



No comments

Powered by Blogger.