Header Ads



பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வெட்டப்பட வேண்டும் - பாரதிய ஜனதா ஆவேசம்


(TU) இந்திய பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி 8-ம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் நாய்க் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரும் மற்றுமொறு வீரரும் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் ராணுவத்தினர் தலையை வெட்டி கொண்டுபோயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் இதனை மறுத்துள்ள நிலையில் பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் பாராளமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஹேம்ராஜின் தலையை பாகிஸ்தான் திரும்பத் தரவேண்டும் இல்லையேல் பாகிஸ்தானியர்களின் 10 தலைகள் வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

உத்திரபிரதேச ஷேம்நகரில் உள்ள ஹேம்ராஜின் வீட்டிற்கு பிஜேபி தலைவர் கட்காரி மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் சென்ற சுஷ்மா இவ்வாறு தெரிவித்தார். ஹேம்ராஜின் தலையை கண்டுபிடித்து தருமாறு கோரி அவரின் மனைவியும் தாயாரும் உண்ணாவிரதம் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஜனவரி 06_ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் இரு பக்கமும் சேர்த்து 4 பேர் கொல்லப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா சுவராஜின் இத்தகைய அறிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மன்மோஹன்சிங் சுஷ்மாவிடமும் பிஜேபியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லியிடமும் எல்லை விவகாறும் குறித்து விவாதித்ததாகவும் இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் பொது பாகிஸ்தானின் தூதுவர்களின் தலைவர் பாகிஸ்தானின் ராணுவம் 2003-ம் ஆண்டு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாங்கள் மீறவில்லை என்றும் இந்திய ராணுவம் பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரரை கொன்றதிற்கு பொறுப்பேர்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.