1000 பவுண் நகைகளால் போர்த்தப்பட்ட தங்க சாமியாரின் உதவிகள் (படங்கள் இணைப்பு)
(ஜே.எம்.ஹபீஸ்)
1000 பவுண் தங்க நகைகளால் போர்த்தப்பட்ட தங்க சாமியாரின் ஏற்பாட்டில் தமிழ் குடிமக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
கம்பளை இந்து மத்திய கல்லூரியில் இடம் பெற்ற ஒரு வைபவத்தில் தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணமும் 200 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
கண்டி மலையக கல்வி மேம்பாட்டு அமையம் ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கான அனுசரணையை கண்டி கால்தென்ன ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தான பிரதம குரு காமினி ஆனந்த சுவாமி வழங்கி இருந்தார்.
சுவாமி அவர்களும் மலையக கல்வி மேம்பாட்டு அமைய நிர்வாக அங்கத்தவர்களான வேலுப்பிள்ளை சிதமபர நாதன், ரோபர்ட் டேனியல், இரா.அ.இராமன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரம், பேராதனை மேலதிக மொழி விருத்திப் பாடநெறி இணைப்பாளர் ஜவாஹிர் எம்.ஹாபீஸ் உற்பட பலர் இதில் கலந்து மாணவர்களுக்கான உபகரணங்களையும் உலர் உணவுப் பொதிகளையும் வழங்கினர்.
தங்க சாமியார் என அழைக்கப் படும் கொடைவள்ளல் காமினி ஆனந்த குருஜியை 1000 பவுண்களுக்கு மேற்பட்ட தங்க ஆபரணங்களால் போர்த்தப்பட்ட நிலையில் படத்தில் காணலாம். இவ் ஆபரணங்கள் அனைத்தும் தத்தமது நேர்திக் கடனை நிறைவேற்றியதன் காரணமாக தமது அடியார்கள் அன்பளிப்புச் செய்தவை என சுவாமி தெரிவித்துள்ளார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete