சமூகவளைத்தளங்களில் Share செய்யும் போது...!
மாஷாஅல்லாஹ்! இன்று உலகலாவிய ரீதியில் நாளாந்தம் புனித இஸ்லாத்தில் ஏராளாமானோர் இணைந்துகொள்கின்றனர். உண்மையிலேயே முஸ்லிம்கள் என்றவகையில் இது எமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய விடயமே.
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரார்கள், கலைஞர்கள், மொடல் அழகிகள், மதகுருக்கள், மாணவர்கள் என பல்வேறுதரப்பினரும் அல்லாஹ்வின் அருளால் அசத்தியத்திலிருந்து சத்தியத்தின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அண்மைக்கால ஆய்வுகளின்படி உலகிலே வேகமாக பரவிக்கொண்டுவருகின்ற மார்க்கமாக புனித இஸ்லாம் திகழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சில நபிமார்களின் பிள்ளைகள், சில நபிமார்களின் பெற்றோர்கள், சில நபிமார்களின் மனைவிமார்கள், சில நபிமார்களின் உடன்பிறப்புக்கள் இறைமறுப்பாளர்களாக வாழ்ந்துமடிந்ததை நாம் வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இறைவன் தான் நாடியவர்களுக்கே நேர்வழிகாட்டுகின்றான் என்பதனை இவ்வாறான வரலாற்று சம்பவங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். இறைவன் தனது திருமறையில் இதனை தெளிவாக கூறியிரக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழி கேட்டில் விட்டுவிடுகிறான். நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான். எனவே உம்முடைய உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்'. (அல்குர்ஆன் 35:08)
இறைவனின் நாட்டிப்படி இறைமறுப்பாளர்களாக இருந்து புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நற்செய்தியினை நாம் இன்று குறுந்தகவல்களிலும், மின்னஞ்சல்களிலும், சமூகவளைத்தளங்களிலும் பரிமாறிக்கொள்கின்றோம். இவ்வாறு சமூக வளைத்தளங்களில் பரிமாறிக்கொள்கின்றபோது நான் அவதானித்ததொரு விடயத்தினையே உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
அதாவது புனித இஸ்லாத்தை ஏற்றுக்ககொண்ட நற்செய்தியினை பகிர்கின்றபோது அதில் ஒரு படம் இணைக்கப்பட்டிருக்கும். இப்படத்தை இரண்டாகப்பிரித்து டீநகழசந என்று ஒரு பகுதியும் யுகவநச என்று மறுபகுதியும் வேறுபடுத்தப்பட்டிருக்கும். இதில் முதலாவது படத்தில் குறித்தநபர் இறைமறுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை காட்டிருயிருக்கும். இரண்டாவது பாதியில் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அவரது புதிய தோற்றத்தோடு புகைப்படம் காட்டப்பட்டிருக்கும். ஆண்களைப்பொறுத்தளவில் ஓரளவிற்கு பிரச்சினையில்லையென்றாலும் பெண்களைப்பொறுத்தவரை இது ஒரு பாரதூரமான பிரச்சினையென நான் நினைக்கின்றேன்.
உதாரணமாக ஒரு மொடல் அழகி இஸ்லாத்தை ஏற்ற நற்செய்தியை தாங்கிவந்திருக்கும் புகைப்படத்தில் அப்பெண் மொடல் அழகியாக இருந்தபோது அரைகுறை ஆடைகளோடு தனது அங்கங்களை வெளிக்காட்டிய ஆபாசமானதொரு புகைப்படம் போடப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாவது படத்தில் ஹிஜாபுடைய வாழ்ககையிலான ஒரு புகைப்படம் போடப்பட்டிருக்கும். இது உண்மையில் ஆர்வக்கோளாறினால் பரிமாற்பபடுகின்ற விடயமென நான் கருதுகின்றேன். உண்மையிலே அவர்களுடைய கருத்து என்னவென்றால் இவ்வாறு வழிதவறிச்சென்றுகொண்டிருந்த ஒரு பெண் இன்று அல்லாஹ்வின் உதவியால் நேர்வழிபெற்று கற்பொழுக்கத்தை பேணி வாழ்ந்துகொண்டிருக்கின்றாள் என்ற மகிழ்ச்சிகரமாக உண்மையினையே அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். இது தவறானதொரு பகிர்வல்லவா... குறித்த பெண்ணே தனது பழைய வாழ்க்கையினை கிள்ளியெறிந்தவிட்டு பாவமன்னிப்புத்தேடி சுவர்க்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற வேளையிலே எமது இஸ்லாமிய சகோதரர்களே அச்சகோதரியின் ஆபாசமான, அநாகரிகமான படங்களை பகிர்ந்தகொள்வது எந்தளவு முட்டாள்தனமானது.

நான் நாளொன்றில் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் சமூகவளைத்தளிங்களில் செலவிடுகின்றபடியால் ஒவ்வொருவரினதும் பகிர்வுகளை நான் அவதானிக்கின்றேன். அந்தவகையில் இச்செயல் என்னை எரிச்சலூட்டிக்கொண்டிருந்ததொரு விடயமாக இருந்துவந்தது. உங்களுக்கும் ஒரு கசப்பான அனுபவமாக இது இருந்திருக்குமென நான் நினைக்கின்றேன். எனவே சமூகவளைத்தளங்களிலே உங்கள் நண்பர்களோடு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள். புனித இஸ்லாத்தில் நுழைந்துகொள்கின்ற மகிழ்ச்சிகரமான நற்செய்தியினை பகிர்ந்துகொள்வோம். இறைவனை புகழ்வோம். இன்ஷா அல்லாஹ்! ஓவ்வொரு பெண்ணினதும் கற்பொழுக்கத்தினை பேணக்கூடிய காவலர்களாக நாம் மாறுவோம்.
நல்லதொரு விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் றூமி. நன்றிகள்.
ReplyDeleteMohamed jamshd
ReplyDeletesariyana vidayam ondrai...suttikaatiulleergal.....
thakx ..bro.roomi