தோணியில் பயணித்து மெழுகுதிரி வெளிச்சத்தில் O/L பரீட்சை எழுதிய 100 மாணவர்கள் - மட்டக்களப்பில் சம்பவம்
(TN) தோணியில் பயணித்து மெழுகுதிரியில் கணித பாட பரீட்சை எழுதிய சம்பவம் நேற்று 17-12-201திங்களன்று மட்டு. வெல்லாவெளியில் இடம்பெற்றுள்ளது.
மட்டு. படுவான்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிறு) வீசிய பலத்த காற்று மற்றும் அடை மழையால் மின்சாரம் ஞாயிறன்று மாலை துண்டிக்கப்பட்டுவிட்டது. வெள்ளம் நேற்று (திங்கள்) க.பொ.த. (சா/த) பரீட்சை யில் கணித பாடப் பரீட்சை மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய பரீட்சை நிலையத்தில் சுமார் 100 மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர். அவர்கள் காக்காச்சிவட்டை, பலாச்சேனை, வேற்றுச் சேனை, 37 ஆம் கிராமம், மாலையர்கட்டு, பாலையடி வட்டை போன்ற பல பின் தங்கிய கிராமங்களிலிருந்து வருபவர்களாவர்.
நேற்றுவரை அங்கு பெய்த பெருமழையால் பல பகுதிகளிலும் வெள்ளம் 4 அடி வரை கரைபுரண்டோடுகிறது. எனவே, அவர்கள் தோணி படகு போன்ற பல் வேறு மார்க்கங்களில் பல வசதியீனங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்கள் நனைந்து அரைகுறையாக நேற்றுக்காலை பரீட்சை மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கு மின்சாரம் இல்லை. அடை மழை ஆதலால் சூழல் இருள் நிறைந்து காணப்பட்டது. பஸ் போக்குவரத்து இடம் பெறவில்லை. அனைத்தும் ஸ்தம்பிதமானதால் கணித பாடம் எழுதுவதில் மாணவர்க்கு பலத்த சோதனை!
அருகிலுள்ள அன்ரனியின் கடையில் மெகுழுதிரி வாங்கி மெழுகுதிரி வெளிச்சத் தில் ஒருவாறு குளிருக்கு மத்தியில் பரீட்சை எழுதினர். சூழல் கும்மிருட்டாக இருந்தது.
ஆளுக்கு ஒரு மெழுகுதிரி வைத்து பரீட்சை எழுதினர். இடையிடையே அடிகாற்றில் மெழுகுதிரி அணையும் பின்பு ஒருவாறு பற்றவைத்து பலத்த அசெளகரியங்களுக்கு மத்தியில் கணித பாட பரீட்சை எழுதி முடித்தனர்.
Post a Comment