சவூதி அரேபியா + டுபாயில் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது
(Tn) சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பிராந்திய நாடுகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட குழுவொன்றை மடக்கிப் பிடித்ததாக ஐக்கிய அரபு இராச்சியம் குறிப்பிட்டுள்ளது. இந்த குழு தீவிரவாத நடவடிக்கைகளுக்காக பொருட்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச ஊடகமான ‘வாம்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபிய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கை மூலமே இந்த குழு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டோரை ‘வழி தவறிய குழு’ என ஐக்கிய அரபு இராச்சியம் விபரித்துள்ளது. அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமியவாதிகளே இவ்வாறு விபரிக்கப்படுகிறது.
சவூதி அரேபியா போன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் அல்கொய்தா அமைப்பின் தாக்குதல்கள் பதிவானதில்லை. எனினும் அங்கு அண்மைக்காலமாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனக்கூறிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது உட்பட எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. இவர்கள் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டார்கள் என்று மாத்திரமே அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment