Header Ads



அம்பாறையில் ஏற்பட்ட புவியதிர்வுக்கு மனித செயற்பாடுகளே காரணமாம்..!

(Sfm) அம்பாறை தமன பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில் இடம்பெற்ற புவியதிர்வுகள் நிலத்தட்டின் கீழ் ஏற்பட்ட அதிர்வுகள் அல்லவென அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த வாரங்களில் வடினாகல, தேவாலஹிந்த மற்றும் பல்லங்கல உள்ளிட்ட பகுதிகளில் சிறியளவிலான அதிர்வுகள் உணரப்பட்டன.

இதுகுறித்து ஆராய்வதற்காக, புவியியல் மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் விசேட குழுவொன்று கடந்த 3 ம் திகதி அந்தந்த பிரதேசங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தியது.

இதன்போது, புவியதிர்வை அளவிடும் கருவிகளை பொருத்துவதற்கும் அந்த குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

நேற்று மாலையும் தமன பிரதேசத்தில் இடம்பெற்ற புவியதிர்வும் ஒரு அலகாக கருவியில் பதிவாகியிருந்தது.

குறித்த அதிர்வுகள் மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டவை என்றும், இயற்கையாக இடம்பெறவில்லை என்றும் புவியியல், சுரங்க அகழ்வு நிறுவுவகத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மஹிந்த செனவிரட்ன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.