Header Ads



அல்ஹைதாவின் செயல்பாடுகளை முறியடிக்க ஆபிரிக்க நாடுகளில் அமெரிக்க படைகள்



ஆப்பிரிக்க நாடுகளில் அல்-காய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட உள்ளன.

 அமெரிக்காவை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மிரட்டல்கள் கவலையடையச் செய்துள்ளது. எனவே, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கென்யா,  உகாண்டா போன்ற நாடுகள், சோமாலியாவை மையமாக வைத்துச் செயல்படும் அல்-சகாப் அமைப்பை எதிர்கொண்டு வருகின்றன.

இந்நாடுகள் உள்பட 35 நாடுகளுக்கு அமெரிக்கா தனது படைகளை சிறுசிறு குழுவாக அனுப்பி வைக்க உள்ளது. முதலில், நேரடியாக களத்தில்  இறங்காமல், அந்நாட்டு படைகளுக்கு நவீன முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, அல்-காய்தாவிக்கு எதிராக படைகளை நேரடியாக களத்தில் இறக்கி போரிட வைப்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக, ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கார்ட்டெர் ஹாம் தெரிவித்தார். 

அல்-காய்தாவின்  இலக்கை தாக்கி அழிக்க, ஆளில்லா சிறிய விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.