Header Ads



பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி தேவையான உதவிகளை செய்யுங்கள் - அமைச்சர் றிசாத்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு எவ்வித தாமதமுமின்றி தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் சகல அரசாங்க அதிபர்களையும் கேட்டுள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒடடுச் சுட்டான்,வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேசத்தில் ஆண்டியாப் புளியங்குளம்,பாவற்குளம்,மீடியா பார்ம், ஆற்றங்கரை மற்றும் திருநாவுக்குளம் பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மன்னார் மாவட்டத்திலும் சில பகுதிகள் வெள்ள அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதால்  அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி தேவையான சமைத்த உணவுகள் வழங்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அமைநச்சர் றிசாத் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதே வேளை பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சரின் இணைப்பு செயலளார்கள்,மற்றும் மக்கள் பிரதி நிதிகளை அவ்விடங்களுக்கு செல்லுமாறும் அமைச்சர் பணிததுள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் சாஹிப் மொஹிதீன்,மன்னார் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் ஆகியோருடன் தொடர்பு கொண்ட அமைச்சர றிசாத் பதியுதீன் மாகாண ஆளுநரின் கவனத்தி்ற்கும் இவ்விடயங்களை கொண்டு வந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுளளார்.

No comments

Powered by Blogger.