ஞாபகம் வருகிறதா..? (படங்கள் இணைப்பு)
(எம். எஸ். பாஹிம்)
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய 50 ஆம் இலக்க ரயில் என்ஜின் இன்று 26-12-2012 முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திட்டப் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். புறக்கோட்டையில் இருந்து காலை 6.15 மணிக்கு மத அனுஷ்டானங்களுடன் பயணமாகும் இந்த ரயிலில் சுனாமி அனர்த்தத்தில் இறந்தவர்களின் உறவினர்களும் பயணிக்க உள்ளனர்.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே போன்ற தினத்தில் கொழும்பில் இருந்து பயணித்த 50 இலக்க என்ஜினுடன் கூடிய ரயில் காலை 9.26 மணிக்கு பெரலிய பகுதியில் வைத்து சுனாமி அனர்த்தத்தில் சிக்கியது. இதில் பல நூறு பேர் இறந்தனர். இதனை நினைவு கூரும் வகையில் மேற்படி ரயில் என்ஜின் திருத்தப்பட்டு எட்டு வருடங்களின் பின் இன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது
மேற்படி ரயில் தெஹிவளை, கல்கிசை, பாணந்துறை, களுத்துறை, அளுத்கமை, பெந்தோட்டை ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டு மக்கள் வழங்கும் மாலைகள், பூஜை கட்டுகளை பெற்றுக்கொண்டு பெரலிய நோக்கிப் பயணமாகும் என வும் சமரசிங்க கூறினார். காலை 9.26 மணிக்கு பெரலிய ரயில் நிலையத்தில் ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப் பட்ட பின் மத அனுஷ்டானங்கள் இடம்பெறும்.
அதன் பின் ரயில் மாத்தறை நோக்கிப் பயணமாகும். இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம உட்பட அமைச்சு அதிகாரிகள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

Post a Comment