Header Ads



பௌத்த பிக்குகளின் நேரடி அச்சுறுத்தல் - முஸ்லிம் சகோதரரின் கடை இழுத்து மூடல்


தெஹிவளையில் முஸ்லிம் சகோதரர் ஒருவர் அண்மையில் 'பேக்கர்' கடையொன்றை ஆரம்பித்துள்ளார். குறித்த கடைக்கு சென்றுள்ள பௌத்த பிக்குகள் உடனடியாக கடை மூடிவிடுமாறு அ ச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த முஸ்லிம் சகோதரர் அதான் ஆரம்பித்த அந்த கடையை மூடியுள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த கடைக்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று காணப்படுவதாகவும் அதனாலேயே பௌத்த தேரர்கள் அந்த பேக்கர் கடையை மூடும்படி அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படுகிற போதிலும், குறித்த பௌத்த விகாரைக்கு அருகில் சாராயக் கடையொன்று அமைந்துள்ளதாகவும் ஆனால் பௌத்த தேரர்களின் எந்தவித அச்சுறுத்தலுமின்றி குறித்த சாராயக் கடை தொடர்ந்து இயங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 7 இலட்சம் பணத்தை செலவிட்டு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் சகோதரர் பேக்கர் கடையை ஆரம்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தை முஸ்லிம் பிரமுகர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

2 comments:

  1. இது போலான செயட்பாட்டுகு சரியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. முஸ்லிம் மீது கை வைத்த புலியே இடமில்லாமல் அழிந்துவிட்டான்.
    துஆவே எமது பலம் . யாஅல்லாஹ் இனவாதிகளுக்கு நல்ல புத்தியை கொடு.

    ReplyDelete

Powered by Blogger.