தற்கொலை குறித்த கட்டுரை எழுத சொன்ன ஆசிரியை இடைநிறுத்தம்
தற்கொலை செய்து கொள்வது குறித்து, மாணவர்களை கட்டுரை எழுத சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் நாட்டின், சாரன்டி பகுதியில் உள்ள, உயர்நிலை பள்ளி ஆசிரியை, தன் வகுப்பில் படிக்கும், 13 மற்றும் 14 வயது மாணவர்களுக்கு, தற்கொலை குறித்த கட்டுரையை எழுதி வரும் படி, வீட்டு பாடம் கொடுத்தார்.
"எந்தெந்த காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளலாம், எப்படி தற்கொலை செய்யலாம்' என்பதை, உருக்கமாக எழுதி வரும் படி கூறியிருந்தார்.வீட்டுக்கு சென்ற மாணவர்கள், இந்த கட்டுரை குறித்த சந்தேகங்களை, தங்கள் பெற்றோரிடம் கேட்டுள்ளனர். இதனால், கொதிப்படைந்த பெற்றோர், பள்ளிக்கு போன் செய்து, நிர்வாகியிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்."எங்கள் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள, பள்ளிக்கு அனுப்பவில்லை. அவர்கள் அறிவை வளர்க்கும் பாடங்களை கற்பியுங்கள்' என, காரசாரமாக பள்ளி முதல்வரை திட்டியுள்ளனர்.வகுப்பு ஆசிரியை செய்த செயலால் வசவுகளை வாங்கி கட்டிக் கொண்ட, பள்ளி முதல்வர், அந்த ஆசிரியரை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
Post a Comment