இலங்கையில் குடும்பங்களைவிட்டு பிரிந்த சிறுவர்களை சேர்த்துவைக்கிறதாம் யுனிசப்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
யுத்தத்தின்போது குடும்பங்களைவிட்டு பிரிந்த சிறார்களை அவர்களின் குடும்பங்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களுடன் இணைத்து வைப்பதற்கான நடவடிக்கையை இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகராலயமும் யுனிசப் நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளது.
இது சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று 28-12-2012 வெள்ளிக்கிழமை ஜப்பான் உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ, இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி றீஸா கொஸ்செய்னி மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
யுத்தத்தின்போது குடும்பங்களை பிரிந்த சுமார் 2431 சிறார்கள் உள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை குடும்பங்களுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே ஜப்பான் அரசாங்கம் சுமார் 445,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவித்த இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் தெரிவித்தார்.
இவ்வாறு பிரிந்த சிறுவர்;களில் ஆண், பெண் என இருபாலாரும் இருக்கின்றனர். இவ்வாறு குடும்பங்களை பிரிந்தவர்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
Post a Comment