கல் அடிக்கிறார்கள் எனக்கூறி இ.போ.ச. ஊழியர்கள் வேலை பகிஷ்கரிப்பு போராட்டம்
(ரபாய்தீன்)
திருகோணமலை இ.போ.ச.ஊழியர்கள் செவ்வாயக்கிழமை (18-12-2012) காலை வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். திருகோணமலை தங்கல்ல இரவு நேர போக்குவரத்து பஸ், இனந்தெரியாத சிலரால் தொடர்ச்சியாக கல்லெறித் தாக்குதலுக்கு உள்ளாவதால் சாரதி, நடத்துனர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டியே இவ்வேலைப் பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஊழியர்கள் தெரிவத்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை தங்கல்ல தனியார் போ.வ.சேவை பி.பகல் 6.30 மணிக்கு புறப்படுகிறது பிரயாணக் கட்டணாக 900 ரூபா அறவிடப்படுகிறது. இதே நேரம் இரவு 9.30 மணிக்கு புறப்படும் இ.போ.வ.பஸ் கட்டணம் ரூபா 550 அறவிடுகிறது. அதிக பிரயாணிகள் பயணிக்கும் இ.போ.வ. பஸ் அடிக்கடி தாக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது;
20.11 ல் மாத்தறை 21.11 ல் திருமலை 5ஆம் கட்டை 21.11 கொக்கிரல்ல 5.12.ல் மெல்சிரிபுர மேலும் பல சம்பவங்கள் நடை பெற்றுள்ளது. இவ்வேலை நிறுத்தத்தை ஆதரித்து பல பஸ் ஊழியர்கள் திருகோணமலை மத்திய பேருந்து தரிப்படத்தில் பதாதைககைத்தாங்கி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். குல்லெறி காரணமாக தொழிலாளர்களின் உயிர்களுக்கு பாதிப்பு,பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோரிக்கைகளை சுட்டிக்காட்டினர் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் .
Post a Comment