Header Ads



'சிரியா ராணுவம் மக்களை கொல்லும் கொலை வெறி கும்பலாக மாறி விட்டது'



சிரியா நாட்டு ராணுவத் தளபதி ஒருவர், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து உள்ளார்.சிரியா நாட்டு அதிபர், பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுத்ததால், கிளர்ச்சியாளர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு, அமெரிக்கா ஆயுதம் வழங்கி வருகிறது.இதனால், சிரியாவில் ஓயாத சண்டை நடக்கிறது. கடந்த, 20 மாதங்களில், 50 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இரண்டு லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள், சிரியாவை ஆதரிக்கின்றன. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் பிடிவாத போக்கைக் கண்டித்து, துணை அதிபர் உள்ளிட்ட பலர் பதவி விலகி விட்டனர்.இதற்கிடையே, சிரியாவின் ராணுவத் தளபதி அல்-ஷலால், பதவி விலகி, கிளர்ச்சியாளர்களுடன் கைகோர்த்துள்ளார். "சிரியா ராணுவம், மக்களை கொல்லும் கொலை வெறி கும்பலாக மாறி விட்டது' என, அவர் தெரிவித்து உள்ளார்.

3 comments:

  1. இதுவும் ஒரு வகையான காய் நகர்தலாக இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.