மேற்கு நாடுகளின் இரட்டை வேடம் பற்றி ரவூப் ஹக்கீம் ஈரானில் தெரிவிப்பு
ஈரான் நீதிதுறைத் தலைவர் ஆயதுல்லாஹ் சாதிக் அமோலி லர்ஜானிஇ நீதிஅமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (23) தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது.
அதன் போது மனித உரிமைகள் தொடர்பில் சில மேற்கு நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை தலைவர் தெரிவித்துள்ளார். ஈரானும், இலங்கையும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச அரங்குகளில் ஒருமித்த நிலைபாடுகளை கொண்டிருந்ததை அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். மனித உரிமைகள், சட்டமுறைமைகள், அரசியல் விவகாரம் என்பன தொடர்பில் விரிவான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஈரானின் நீதியமைச்சசர் செய்யித் மொர்தெஸா பக்திஅரி மற்றும் அந் நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இவ்வுரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசனலி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச.;எம்சல்மான் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்
Post a Comment