Header Ads



இந்த ஆண்டின் சிறந்த மனிதார்களாம் இவர்கள்..!



அமெரிக்க அதிபர் ஒபாமாவை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக அந்நாட்டைச் சேர்ந்த பிரபலமான டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

இது குறித்து அப்பத்திரிகை கூறுகையில், "கலாசார ரீதியாகவும் மக்கள்தொகை ரீதியாகவும் மாறிவரும் அமெரிக்காவின் அடையாளமாகவும் நாட்டின் சிற்பியாகவும் ஒபாமா திகழ்கிறார்' என்று தெரிவித்துள்ளது. அவரது படம் இப்பத்திரிகையின் அட்டையில் வெளியாக உள்ளது. ஒபாமாவை ஏற்கெனவே கடந்த 2008இல், ஆண்டின் சிறந்த மனிதராக அப்பத்திரிகை தேர்வு செய்திருந்தது. இப்போது, இப்பட்டத்துக்கு இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்ட 13 ஆவது நபர் ஒபாமா ஆவார்.

அவரைத் தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வி உரிமைப் போராளி மலாலா, எகிப்து அதிபர் முகமது மோர்சி, ஆப்பிள் நிறுவன அதிபர் டிம் குக், கடவுள் துகள் அணுவெடிப்புச் சோதனையில் ஈடுபட்ட பேபியோலா கியானோட்டி ஆகியோரையும் 2012ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டத்துக்கு டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.