முசலிக்கு முஸ்லிம் கல்விப் பணிப்பாளர் நியமனம் - சில தீய சக்திகள் எதிர்ப்பு
(முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்)
முசலி கோட்டக் கல்விப் பணிப்பாளராக அ.ச ஜுனைட் நியமிக்கப்ட்டுள்ளார் கூளாங்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை முசலி ம.வி இலும் உயர் கல்வியை எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியிலும் பட்டக் கல்வியை பேராதனையிப் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.
முசலி கோட்டக்கல்விப் பணிப்பாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டதைப் பொறுக்காத சில தீய சக்திகள் இந்நியமனத்திற்கெதிராக ஆசிரிய சங்கங்களை பிழையாக வழி நடத்தியுள்ளதையிட்டு நாம் பெரிதும் கவலையடைகிறோம். கல்வி நிருவாக சேவை தரம் 111 ஐச் சேர்ந்தவர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பதவிக்கு ஏன் பொருத்தமில்லை என ஆசிரியர் சங்கத்திடம் மக்கள் வினாத் தொடுக்கின்றனர்.
முசலி கோட்டக்கல்வி அலுவகத்திற்காக கட்டிட வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முசலிப் பிரதேச சபைத் தலைவர் தேசமான்ய அ.வ எஹியான் தெரிவித்ததுடன் புதிய கட்டிடம் அமைக்கப்படும் வரை முசலிக் கோட்டக் கல்விக் காரியாளத்திற்கு தற்காலியமாக இயங்கும் ஒரு இடத்தை பிரதேச செயலகச் சூழலிப் பெற்றுக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவுத்துள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் முசலிப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைக்கும் பௌதீக வளத்தை பெருக்குவதற்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் நடை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment