Header Ads



கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவை சம்பந்தமாக ஆராயும் கூட்டம் (படங்கள்)


(வதூத் இர்பான்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவை என்னும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவை சம்பந்தமாக ஆராயும் கூட்டம் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் வீதி அபிவிருத்தி அமைசின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மறறும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபிஸ் நசீர் மற்றும் அமைச்சின் உயர்  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், மீன்பிடி, கால்நடை, கிராமிய கைத்தொழில் தொடர்பான அபிவிருத்தி விடயங்களும் அமைச்சர்களின் ஆலோசனையும் இடம் பெற்றது.






No comments

Powered by Blogger.