மன்னார் முசலிப் பிரதேசத்தின் தகவல்களை ஆவணப்படுத்தல்
1990 இடப் பெயர்வின் பின்னர் அழிந்து கிடக்கும் முசலிப் பிரதேசத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு நன்முயற்சிக்காக பின்வரும் தகவல்கள் முசலிப்பிரதேச முதியவர்கள், புத்திவிகள், உலமாக்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் போன்றோரிடம் இருந்து கோரப்படுகின்றன. தகவல்கள் உண்மையாகவும் , பக்கச்சார்பில்லாதவையாகவும், குடும்ப ஆதிக்கங்களை பறைசாற்றாதவையாகவும் அமைந்திருத்தல் சிறப்பானது.
1. பிரதேச ஆரம்பக் குடியேற்றம்.
2. புனித அடக்கஸ்தலங்களில் அடக்கப்பட்ட வலிமார்களின் பெயர்கள்.
3. பிரதேச கிராமங்களின் பெயர் வந்ததற்கான காரணம்.
4. பிரதேசத்தில் கடமை புரிந்த னுசுழு , யுபுயு, னுளு விபரங்கள்.
5. அல்லி ராணிக் கோட்டை பற்றிய வரலாறு.
6. புலவர்களின் வரலாறு (பாடல்களுடன்).
7. வைத்தியர்கள், விஷக்கடி வைத்தியர்கள்.
8. பிரதேசப் பள்ளிவாயல்களின்; வரலாறுகள்.
9. பிரதேசப் பாடசாலைகளின் வரலாறுகள்.
10. பிரதேசத்தின் தாய்ப் பாடசாலையான மன்ஃமுசலி மகா வித்தியாலயத்தின் வரலாற்றுத் தகவல்கள்.
11. பிரதேசத்தின் அரசியல் தலைவர்கள் ,முன்னாள் கிராம சபை, பிரதேச சபை தலைவர்கள்.
12. அகத்தி முறிப்புக் கட்டுக்கரைக் குளம்பற்றிய தகவல்கள்.
13. பிரதேசத்தின் மீன்பிடி ,சங்கு, அட்டை, முத்துக் குளித்தல், பற்றிய தகவல்கள்.
14. முசலிப்பிரதேச மண்ணிண் மைந்தர்களான உயர் பதவி வகிப்போர் பற்றிய தகவல்கள்.
15. கொண்டச்சி (கஜூவத்தை) குடியேற்றம் பற்றிய தகவல்கள்.
16. தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை பறை சாற்றும் வரலாற்றுச் சம்பவங்கள்.
17.அருவியாற்றுப் பாலம் தொடர்பான தகவல்கள்.
18. பிரதேசத்தில் காணப்பட்ட சமய சம்பிரதாய நிகழ்வுகள்.
19. இந்தியாவிலிருந்து வருகை தந்த மௌலானாக்கள் பற்றிய தகவல்கள்.
20. பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள்.
21. முசலிப் பிரதேச யானைபிடித்தல் பற்றிய தகவல்கள்.
22. மன்முசலி மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்ட திகதி,கடமை புரிந்த அதிபர்களின் புகைப்படங்கள்,அவர்களைப்பற்றிய விபரங்கள்.
23. பதிவாளர்கள், நொத்தாரிசுமார் பற்றிய விபரங்கள்.
இடப்பெயர்வின் பின்னர் ஒரு புதிய சமூகம் உருவாகியுள்ளதாலும், எம் பிரதேச வரலாறு எழுதப்பட வேண்டியது கடமையாகும். இந்த நன்முயற்சிக்கு உங்கள் அனைவரினதும் ஆதரவு இன்றியமையாததாகும்.
தகவல்கள் யாவும் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
முசலியூர் .கே.சி.எம். அஸ்ஹர்
74ஃ2 சின்னப்பள்ளி வீதி
அக்கரைபற்று-03
Post a Comment