சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்
உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிச., 2ம் தேதி, சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். உரிய மதிப்பு:தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்படுகின்றனர். ஒவ்வொருவரும், மற்றவரின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க இத்தினத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
Post a Comment