Header Ads



தேசிய பாதுகாப்பு தினம் நாளை அனுஷ்டிப்பு


(மர்லின் மரிக்கார்) தேசிய பாதுகாப்பு தினம் நாளை 26ம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இத்தினத்தில் இரு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

26ம் திகதி காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை மெளன அஞ்சலி செலுத்துமாறும் அந்த அமைச்சு கேட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இந்த இரு நிமிட மெளன அஞ்சலி வருடா வருடம் செலுத்தப்படுவதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார்.

இவ்வருட தேசியப் பாதுகாப்பு தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இது தொடர்பான நிகழ்வுகள் ஊவா மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றன.

பதுளை மாவட்டத்தின் வெவ்வேறு பிரதேசங்களில் மண்சரிவு, காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அவை தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதற்காகவே இவ்வருடம் தேசிய பாதுகாப்பு தினத்தை பதுளை மாவட்டத்தில் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.