ஈமானின் கொடி சுமந்த இளங்குயில் ரிஸ்கான்
(சவூதி அரேபியா மக்கா நகரில் 83 நாடுகள் பங்கு பற்றிய சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடம் பெற்ற இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மட் ரிஸ்கான் அவர்களைப் பாராட்டி எழுதிய கவிதை)
ஈமானின் கொடி சுமந்த இளங்குயில் ரிஸ்கான்
மதியன்பன்
பூரிக்கிறது உள்ளம்
ஒரு
புல்லாங்குழலின் வாசிப்புக் கண்டு.!
அந்த வாசிப்புக்கு
அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
யார் சொன்னது
இனிமை
குயிலின் குரலில் குடியிருப்பதாக..
ஓதிப்பாருங்கள் புர்pந்து விடும்
இனிமை இருப்பது
அது
அல்குர்ஆனில் மாத்திரந்தான்..!
மக்காவில் நடந்த
மறை ஓதும் மனனப்போட்டியில்
எண்பத்தி மூன்று நாடுகள்
கண்களில்
எண்ணைவிட்டுக் காத்திருந்தன..
இத்தனையும் தாண்டி
இலங்கையின்
இளங்குயில் றிஸ்கான்
இலக்கை அடைந்திருக்கிறான்
முதலாம் இடத்திற்கு முன்னேறி
வெற்றிவாகை சூடியிருக்கிறான்..!
பௌத்த நாட்டின்
தேசத்திற்கு மகுடம் சூட்டிய
நேசத்திற்குரியவன்
இன்று
கலிமாவின் கொடியோடு
கட்டு நாயகா வருகிறான்
குர்ஆன் சுமந்த கோகிலம்
கலிமாவின்
கொடி சுமந்து வருகிறது
வஞ்சகமில்லை
இந்தப் பிஞ்சி நெஞ்சில்..!
வான் மறை குடியிருக்கிறது.
தீன் அடியிருக்கிறது.
இறைவனின் கருணை
இவனுக்கு நிறைந்திருக்கிறது.
றிஸ்கான்
மதீனத்துல் இல்ம் கல்லூரியின்
இளம் மாணவன்
களம் கண்டிருக்கிறான்
பெற்றோருக்கும் பிறந்த நாட்டுக்கும்
பெருமை சேர்த்திருக்கிறான்.
நெற்றிலும் கிரிகெட்டிலும்
சின்னத்திரை வானொலிகளிலும்
சீரழிந்திருக்கும்
இளம் மாணவர்களுக்கும்
இவர்களை
கண்டு கொள்ளாத பெற்றோர்களுக்கும்
றிஸ்கான் ஒரு முன்மாதிரி
இவனை
வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்
பாராட்டுகிறோம்
உள்ளத்தில் வைத்து தாலாட்டுகிறோம்
இன்னுமின்னும் வெற்றிபெற
பிரார்த்திக்கின்றோம்.
arumai... arumai..
ReplyDelete