பேஸ்புக் மூலம் ஆட்களை திரட்டும் தலிபான்கள்
பாகிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்காக பேஸ்புக் கணக்கு தொடங்கி உள்ளது. தமக்கு ஆதரவாக 3 மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் வகையில் இதழ் தயாரிக்கவும், வீடியோ எடிட்டிங் செய்யவும், தகவல்களை மொழி மாற்றம் செய்ய மொழி பெயர்ப்பாளர்களை பேஸ் புக் மூலம் தேர்வு செய்து வருகிறது.
இந்த பேஸ் புக் பக்கம் கடந்த நவம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ள மெசேஜில், அன்புள்ள சகோதர சகோதரிகளே, வாளின் கூர்மையை விட பேனாவின் சக்தி பெரிது. இந்த சக்தி வாய்ந்த ஆயுதத்தை (பேனா) பயன்படுத்த உங்களுக்கு அரிய வாய்ப்பு. அயா இ கிலாபத் என்ற இதழ் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இதழுக்கு எழுத்தாளர்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம். அல்லது ஜிகாத்தை பற்றியோ, வரலாறு, இஸ்லாமிய இயக்கம் பற்றி எழுதலாம் என்று அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'உமர் மீடியா டிடிபி என்ற இந்த பேஸ் புக் பக்கத்துக்கு 290 பேர் லைக் கமென்ட் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க தனியார் உளவு அமைப்புகள் கூறுகையில், பேஸ் புக் மூலம் தலிபான்கள் ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதன் பின்னணியில் ஹகிமுல்லா மசூத் என்பவர் செயல்படுகிறார்' என்று தெரிவித்துள்ளன.
Post a Comment