Header Ads



மத அடிப்படைவாதம் தலைதூக்க சிலர் முயற்சி - சஜித் பிரேமதாஸா


(vi) எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியாவினதோ, வெளிநாடுகளினதோ ஆலோசனைகள் அவசியமில்லை. ஆனால் அரசாங்கம் அவ்வாறான ஆலோசனைகளை நாடிச் செல்வதனாலேயே வெளிநாடுகள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடுகின்றது என ஐ.தே.க. எம்.பி சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தின் போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

'ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் எதுவிதப் பிரச்சினையும் இல்லை. 13ஆவது திருத்தத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதுவிதமான பாதிப்பும் இல்லையென உயர் நீதிமன்றமே கருத்து வெளியிட்டுள்ளது.

ஆனால் தமது அரசியலுக்காக சிலர் இன, மத அடிப்படைவாதத்தை தலைதூக்கச் செய்வதோடு 13ஆவது திருத்தத்தையும் எதிர்க்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகவே வெளிநாடுகள் எமது பிரச்சினைகளில் தலையிடும் நிலைமை தோன்றியுள்ளது என்றார்.

2 comments:

  1. சமாதான இலங்கை வேண்டுமென்றால் 13ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. ஏய் சஜித்தே நீங்கள் எல்லோரும் செய்த பிழைகளையும்,அட்டூழியங்களையும் (நாம் சிறுபாண்மையினருக்கு இன்னின்ன கொடுமைகளை செய்தோம்) என்று சுட்டிக்காட்டி மன்னிப்பு கேட்டு இனி இப்படியெல்லாம் நடக்க விடமாட்டோம் என்று வருவீர்களோ அப்போது நாம் உங்களை நம்புவோம்

    ReplyDelete

Powered by Blogger.