Header Ads



சூரியன் விட்டுவிட்டு கண் சிமிட்டியபடி ஒளிர்ந்ததாம்..!



மாயன் காலண்டர் கடந்த 21-ந்தேதியுடன் முடிந்தது. எனவே அன்றுடன் உலகம் அழியும் என்ற பீதி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைத்தது. இக்கருத்தை விஞ்ஞானிகள் மறுத்தாலும், விண்ணில் நிகழும் மாற்றங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தனர்.

மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் அதாவது 22-ந்தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் ‘சூரிய சக்தி கண்காணிப்பு’ மைய விஞ்ஞானிகள் சூரியனை போட்டோ எடுத்தனர். அப்போது சூரியன் விட்டுவிட்டு கண் சிமிட்டியபடி ஒளிர்ந்தது. இதற்கு, மாயன் காலண்டரில் குறிப்பிட்டபடி உலகம் அழிவதற்கான அறிகுறி இல்லை. சூரியனில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிப்பே இதற்கு காரணம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மாயன் காலண்டரின் கூற்றுப்படி பூமியை வேற்று கிரகம் தாக்குகிறதா? அல்லது பூமி வழக்கத்துக்கு மாறாக பின்புறமாக சுற்ற தொடங்குகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். 

No comments

Powered by Blogger.