Header Ads



ஈரானில் ரவூப் ஹக்கீம்..!



ஈரானுக்குஉத்தியோகபூர்வவிஜயமொன்றைமேற்கொண்டுள்ளநீதியமைச்சம், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நாட்டு நீதியமைச்சர் செய்யத் மொர்தெஸா பக்திஅரி இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர். ஈரான் நீதியமைச்சில் இச்சந்திப்புசனிக்கிழமை (22) இடம் பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இருநாடுகளிடையேயும் பேணப்பட்டுவரும் சிறப்பான இராஜதந்திர உறவை அமைச்சர்கள் இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இரு நாடுகளும் அணிசேராநாடுகள் அமைப்பின் உறுப்புநாடுகள் எனக் குறிப்பிட்டஈரானியநீதியமைச்சர்,தமதுநாடுதற்பொழுதுஅவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பைவகிப்பதையும்சுட்டிக்காட்டினார். பொதுவானவிடயங்களில் ஈரானும், இலங்கையும் பரஸ்பரம் ஒத்துழைத்துவருவதுபற்றியும் அவர்பெருமிதமடைந்தார்.

இலங்கையைப் பொறுத்தவரை உமாஓயா அபிவிருத்தித்திட்டம், கிராமியமின்விநியோகத்திட்டம்என்பவற்றுக்கான ஈரானின் பாரிய பங்களிப்பிற்கும், இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவுசெய்வதற்காக அந்நாடுதமதுநாடடிற்கு சலுகை விலையில் எரிபொருள் விநியோகம் செய்தமைக்கும் அமைச்சர் ஹக்கீம் நன்றிதெரிவித்தார். 

ஈரானுக்குஉலகஅரங்குகளில் இலங்கைகுரல் கொடுத்தமைக்கு அந் நாட்டுஅமைச்சர்நன்றிதெரிவித்தார்.

சட்டஉதவிமற்றும் குற்றவியல்,குடியியல் (சிவில்) நீதித் துறைகளில் உடன்பாடுகாண்பதுபற்றியும்,சட்டவிரோதமாகதமதுநாடுகளுக்குள் பிரவேசிப்பவர்களைவெளியேற்றுவதுதொடர்பில் ஒப்பந்தமொனறைச் செய்துகொள்வதுபற்றியும்ஆராயப்பட்டது.

இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்புமையத்தின் பயன்பாடு பற்றி ஈரானின் வர்த்தக மன்றத்தினருக்கும்,தொழில் சார்நிபுணர்களுக்கும் அறியச் செய்யுமாறு அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். அதுபற்றி அணிசேராநாடுகளின் அமைப்பிற்கும் தெரியப்படுத்துவது பெரிதும் பயனளிக்குமென்று ஈரான் அமைச்சர்அபிப்பிராயம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான,அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி,சட்டத்தரணிஎம்.ஏச்.எம் சல்மான் ஆகியோரும் அமைச்சர் ஹக்கீமுடன் ஈரான் சென்றுள்ளனர்.


டாக்டர் ஏ.ஆர்.ஏ ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

No comments

Powered by Blogger.