Header Ads



கல்முனை நகரை இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக பாலம்


(எம்.எம்.ஜபீர்)

கல்லோயாக் குடியேற்றங்களிலுள்ள பழம்பெரும் கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் மேலாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அம்பாரை மாவட்டத்தில் கடந்த  சில தினங்களாக பெய்த மழையினால் கிட்டங்கி தாம்போதி ஊடாக பயணிகள் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதன் காரணமாக குடியேற்ற கிராம மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். இவ்விடயம் தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரும், அமைப்பாளருமான ஏ.கே.அப்துல் சமட் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்ததுடன்,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜக்ஷ ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே கிட்டங்கி பாலத்தை நிர்மாணிப்பதற்கான பொருட்கள் அவ்விடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

தற்போது இவ்வீதியில் வெள்ளம் படிப்படியாக குறைவடைந்து வரும் நிலையிலேயே பாலம் நிர்மாணிப்பதற்கான பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் நிர்மாணப் பணிகள் கல்முனை பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளது.




     

No comments

Powered by Blogger.