புலிகளை காப்பாற்ற கூகுள் நிறுவனம் உதவபோகிறதாம்..!
உலக முழுவதும் காட்டு விலங்குகள் திருட்டுத்தனமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா காடுகளில் வாழும் காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் யானைகளை காப்பாற்ற அதிநவீன தொழில்நுட்பம் தேவை என்று உலக வனவிலங்கு நிதியத் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். உலக விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கி வரும் கூகுள் நிறுவனம் இத்திட்டத்திற்காக ஆளில்லா விமானங்களை வாங்கி கொடுக்க முன்வந்துள்ளது.
சிறிய டப்லெட் கம்பியூட்டர் மூலம் இந்த ஆளில்லா விமானங்களை இயக்கி, ரேடியோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ள அரியவகை வன விலங்குகளை கண்காணிக்கவும் அதை வேட்டையாடும் திருடர்களின் நடமாட்டத்தை அறியவும் இது மிக உதவும் என்று நம்பப்படுகிறது.
உலக வனவிலங்கு நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள 5 மில்லியன் டாலர் நிதியினை பயன்படுத்தி விலங்குகளின் பாகங்களில் உள்ள டி.என்.ஏ. வைத்து அவைகளின் நடமாட்டத்தை கண்டறியும் சோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
vallth thukkal
ReplyDelete