Header Ads



'ஊடகதர்மத்தை காக்க வேண்டிய கடப்பாடு ஊடகவியலாளருக்கு அவசியம்'



(எஸ்.எல். மன்சூர்)

ஒழுக்கநெறிதவறாத சிறப்பான ஊடக தர்மத்தை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு அனைத்து ஊடகவியலாளர்களிடமும் காணப்படுதல் அவசியமாகும் என இலங்கை பத்திரிகை பேரவையின் அனுசரணையுடன் அம்பாரையிலுள்ள மொன்டியா விருந்தினர் இல்லத்தில் அம்பாரை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒழுக்கநெறி சம்பந்தமான பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெற்றது. அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, மற்றும் மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் அஜீத் ரோஹன, சிலுமின பத்திரிகையின் பிரதம ஆசிரியர், இலங்கை பத்திரிகை பேரவையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட இப்பட்டறையின்போது ஊடகவியலாளர்களின் ஒழுக்கநெறிக்கோவை, செய்தி எழுதுகின்றபோது ஊடகவியலாளர்கள் கவனத்திற் கொள்ளவேண்டிய அம்சங்கள் பற்றிய விளக்கங்கள் மேற்படி அதிதிகளினால் விரிவுரையாற்றப்பட்டன.

தமிழ், முஸ்லீம், சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இப்பயிற்சியின்போது கூறப்பட்ட கருத்தாடல்களை தொகுத்து இங்கே வழங்கப்படுகின்;றது.

கடந்தகாலங்களில் இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக நாடுமுழுவதும் ஒரு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது. இன்று இரவிலும், பகலிலும், எவ்வேளையிலும் நாடுமுழுவதும் சென்று வருவதற்கான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலை காணப்படுகிறது. இன்று மக்கள் அனைவரும் ஒரு சுதந்திரமான நாட்டில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. 1975ஆண்டில் யாழ்ப்பானத்தில் அல்பிரட் துரையப்பா தொடக்கம் வீ.யோகஸ்வரன், அ. அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற பல தலைவர்கள் பயங்கரவாதிகளினால் கொள்ளப்பட்டனர். நாட்டில் பயங்கரவாதம் மட்டுமே காணப்பட்டது. இந்தப் பயங்கரவாத்தை உயர்த்திக் காண்பிப்பதற்காக பல ஊடகங்கள் செயற்பட்டன. எந்தவொரு விடயத்தையும் பெருப்பித்துக் காண்பிக்கும் தன்மை ஊடகத்திற்கு உண்டு. மக்களுக்கு சரியானதும், உண்மையானதுமான செய்திகளை வழங்கும் கடப்பாடும் உண்டு. அதேவேளை மக்களுக்கு பிரச்சினையாக அமையும் செய்திகளை வெளியிடாமல் சமூகத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் ஊடகவியலாளர்களின் கைகளில்தான் உண்டு.

நாட்டின் தலைவர்களும், பலதரப்பட்ட அறிஞர்களும், கல்விமான்களும் இனமத வேறுபாடின்றி கொல்லப்பட்டனர். சமயத்தளங்கள் பயங்கரவாதிகளினால் சுக்குநூறாக்கப்பட்டன. மக்கள் பயத்துடன் சுமார் முப்பது ஆண்டுகள் தங்கள் உயிரை கையில் வைத்திருந்த நிலைமை மாற்றம் பெறுவதற்கு இன்றைய அரசின் தீர்க்கமான முடிவு காரணமாக அமைந்திருந்ததை யாவரும் அறிவீர்கள். இளைஞர்கள், சமயத்தலைவர்கள், புத்திஜீவிகள் அனைவருமே கொல்லப்பட்டனர். நல்ல கருத்துக்களை யார் கூறினாலும் அவர்களும் கொலை சய்யப்பட்டனர். சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் கருத்துக்களை திரிபுபடுத்திக் கூறப்பட்டதனால் பயங்கரவாதிகள் வளர்க்கப்பட்டார்கள். மக்கள் அழிந்து கொண்டு சென்றார்கள். ஊடகத்தின் உயர்விழுமிய ஒழுக்க நெறிகள் முறையாக பின்பற்றப்படாது தவறான முறையில் ஊடகங்களும், செய்தியாளர்களும் மக்களுக்கு கருத்துக்களைக் கூறிக் கொண்டு வந்தன.

ஆனால் அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அரசின் அபிவிருத்தியை நோக்கிய பயனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக எழுதும் ஊடக சுதந்திரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு ஊடகவியலாளனும் உண்மைத்தன்மையான செய்திகளை மக்கள் மத்தியில் பேசும்படியாக எழுதவேண்டும். வெறுமனே போட்டோக்களை மாத்திரம் பதித்துவிட்டு ஒதுங்கிவிடாது நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளையும் எழுதுகின்ற ஊடகவியலாளர்கள் தைரியமாக முன்வருதல் வேண்டும். அதேவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற செய்திகளுக்கு தடையை ஏற்படுத்துகின்ற சட்டமுறைமைய ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனையும் தாண்டி சில ஊடகங்கள், ஊடகவியாலாளர்கள் எழுந்தமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரச்சினைகளை தூண்டிவிடுவதைத் தவிர்த்துக் கொள்ளல் முக்கியமாகும் என இப்பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட அதிதிகளின் விரிவுரைகளிலிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும்.

இப்பயிற்சியில் வெற்றிகரமானமுறையில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேநேரம் அதிக தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டபோதிலும் முறையான தழிழ்  மொழிபெயர்ப்பாளர் இன்மையால் கூறப்பட்ட சிங்களமொழியில் கூறப்பட்ட கருத்துக்களை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாமல் போனமை கவலை தரும் விடயமாக இருந்தாகவும் அதிகமான ஊடகவியலாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். அரசின் மொழியுரிமை பங்கீடு உரிய முறையில் பேணப்படுதலின் அவசியம் ஊடகவியலாளர் முன்னிலையில்கூட அரிதாகவே பங்கீடப்பட்டுள்ளமை கவனித்தக்கதான விடயமாகும்.








No comments

Powered by Blogger.